Saturday, 9 February 2013

Daily Bible Study:நியாயப்பிரமாணம்


நியாயப்பிரமாணம்

நியாயப்பிரமாணம் என்பது  நன்கு ஏற்பாடுசெய்யப்பட்ட சட்ட ஒழுங்குகள் மூலம் ஒரு சமுதாயத்தை ஆட்சிசெய்தலாகும் . வேதாகமத்தில், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு சிறந்த நியாயப்பிரமாணங்கள் கர்த்தரினால் தனது பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டன. அவற்றின்நோக்கம்..
1. கர்த்தரைஆராதனை செய்வதற்கும்,
2.கர்த்தருடன்  தொடர்பு கொள்வதற்கும்
3.,ஒருவரோடொருவர் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும்
மோசேயின் நியாயப்பிரமாணமானது மற்ற நாட்டு நியாயப்பிரமாணங்களை விட பல விதங்களில் வித்தியாசமானது.மேசேயின் நியாயப் பிரமாணம் முலாவதாக அதன்தோற்றத்திலேயே வித்தியாசமானது.  அதாவது இறைவனால் கொடுக்கப்பட்டது. இந்த நியாயப்பிரமாணம் பரிசுத்தமானது, நீதியானது, சிறந்தது. இவைகள கர்த்தரால் சீனாய் மலையில்வைத்து இஸ்ரவேல் மக்களுக்காக் கொடுக் கப்பட்டவையாகும். இந்த நியாயப்பிரமாணங்கள் மக்களை ஒன்றிணைத்தது, அவர்கள் இறைவனால் ஆதரிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக  இந்த நியாயப்பிமாணங்கள் உலகமயமானது, இந்த நியாயப்பிரமாணமானது கர்த்தரின் அன்பின் வெளிப்பாடாகும். இந்த உடன்படிக்கையை கைக்கொள்பவர்கள் யாவரும் கர்த்தருடைய சொந்த ஜனமாவார்கள்.( யாத். 19:5-6)
இஸ்ரவேலில் செய்யப்படும் சகல குற்றங்களும்  கர்த்தருக்கு விரோதமான வையாகும்.(1.சாமு. 12: 9-10) அவர் தனது பிள்ளைகள் தன்னையே நேசிக்கவும் சேவிக்கவும் வேண்டுமென்று விரும்புகிறார்.( ஆமோஸ் 5: 21-24) தன்னுடைய நியாய ப்பிரமாணங்களை மீறுபவர்களை அவர் நியாயாதிபதியாகவிருந்து தண்டித்து ஒழுங்குபடுத்துவார்.( யாத். 22: 21-24, உபாக. 10: 18, 19:17) அந்ததேசத்தார் அல்லது அந்த சமூகத்தாரே நியாயப்பிரமாணத்தை நடப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டியவர்களாகும்.(உபா. 13: 6-10, 17:7, எண் 15: 32-36)
கர்த்தரின் நியாயப்பிரமாணமானது ஏனைய நாடுகளில் காணப்படும் நியாயப்பிரமாணங்களைப் போலல்லாது முற்றிலும் வித்தியாசமானது. இது மனித உயிர்கள் மிகவும் விலையேறப்பெற்றவை என்பதைவெளிக் காட்டுகின்றன , ஏனெனில் மனித உயிர்கள் கர்த்தருடைய சாயலில் உருவாக்கப்பட்டவர்கள். வேதாகமத்தின் நியாயப்பிரமாணமானது மிகவும் நீதியும் இரக்கமும்கொண்டவையாகும். இவை மிருகத்தனமற்றவையும் கெடுதலற்றவையுமாகும். கர்த்தருடைய பார்வையில் சகலரும் சமமானவர்களே.

No comments:

Post a Comment