Friday 15 February 2013

நியாயப்பிரமாணம்:

1.       தலைவரை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள்.:- இஸ்ரவேல்மக்கள் தலைவர்கள் சுதந்திரமாகவும் குற்றமற்றும் தைரியமாகச் செயற்படுவதற்காக  பல வித்தியாசமான சட்டங்கள் இவ்வகையான குடியியல் சட்டத்திற்றகாக வரையப்பட்டுள்ளன.
2.       சட்டத்திற்கு விலக்கப்பட்டவை:- பல வகையான மக்கள் வாக்களிப்பதற்கோ அல்லது  அலுவலகத்தில் சேவைசெய்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கர்த்தர் கட்டளையிட்டுள்ளார். அவர்களாவன
1. வலது குறைந்தோர்.
2. விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
3. வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது
4. மேவாப்பியர், அம்மோனியர் போன்று விலக்கப்பட்ட அந்நியர்.( உபா. 23:1-3) இவ் வகையான சட்டகளால் இஸ்ரவேலர்களை  கர்த்தருக்குமுன்பாக பூரணமுள்ளவர்களும் சுத்தமுள்ளவர்களுமாக இருப்பதற்கு படிப்பிக்கின்றார்.
3. இராஜாக்களுக்கான சட்டங்கள்.:- அனேக வருடங்களுக்குமுன் இஸ்ரவேலர்களுக்கு ராஜா இருந்தார். இஸ்ரவேலருக்காக ராஜா நியமிக்கப்படுவதானால் , அவர் கர்த்தரால் கொடுக்கப்படும் சட்டங்கள் யாவற்றையும் கைக்கொள்ளல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர் உண்மையான இஸ்ரவேலனாக இருத்தல்வேண்டும் அத்துடன் அவர் கர்த்தரை மட்டும் நம்பவேண்டும். பல மனைவிகள் உடையவராக இருத்தல் கூடாத..( உபாக. 17: 14-20)  நியாயாதிகளின் புத்தகத்தகம் தற்காலிக இராணுவ தலைவராக செயற்படுகின்றது. சிலசெயற்பாடுகள்  தற்காலிக நியாயாதிபதியாகவும் செற்படுகின்றது. இஸ்ரவேல் ராஜாக்கள் இந்த நியாயாதிபதிகளைவிட வித்தியாசமானவர்கள்.
4. நியாயாதிபதிகளுக்கான சட்டங்கள்:- நியாயாதிபதிகளில் இரண்டு பிரிவினர் உள்ளனர். ஆசாரியர்களும் ஆசாரியர்கள்அல்லாதவர்களும் (மூப்பர்கள்). ஆசாரியர்கள் சமயசம்பந்தமான வழக்குகளை விசாரிப்பார்கள், மூப்பர்கள் குடியியல் சம்பந்தமான வழக்குகளை விசாரிப்பார்கள்.(உபா. 17: 8-13, 2 நாளா. 19: 8, 11) நியாயாதிபதிகள் மூப்பர் என்றும் அழைக்கப்படுவர் இவர்கள் வீட்டுத் தலைவர்களால் தெரிவு செய்யப்படுவார்கள். (யாத். 18: 13-26)
5. நீதிமன்றம் சார்ந்த சட்டங்கள்.:- கர்த்தர் இஸ்ரவேலர்களை இவ்வகையான சட்ட ஒழுங்கு முறைக்கான ஒழுங்கு முறைகளை  நியாயாதிபதிகளின் கட்டிடங்களில் ஒழுங்கு படுத்தல் வேண்டுமென்று கர்த்தர் கட்டளையிட்டார்.( யாத். 18:21-22, உபா. 1:15). குறிந்த விடயங்களை குறிந்த நியாயாதிபதிகளின் சபை தீர்மானிக்கலாம்., அத்துடன் பாரிய விடயங்களை பெரிய சபை நியாயந்தீர்க்கலாம். (உபா. 16:18). நியாயாதிபதிகளின் சபைகளால் தீர்மானிக்க முடியாதவற்றை  உயர்நிதிமன்றத்தில் பிரதான நியாயாதிபதி விசாரிப்பார்.( 2.நாளா. 19: 10-11). உயர்நீதிமன்றத்தில் கர்தரே நியாயாதிபதியாயிருப்பார்.( யாத்.22: 21-24, உபா. 10:18)
நியாயாதிபதிகள் பணக்காரர் மத்தியிலும், ஏழைகள் மத்தயிலும், விதவைகள்மத்தியிலும், அந்நியர் மத்தியிலும், ஏனய உதவியற்றோர் மத்தியிலும்  பாரபட்சமின்றி நடத்தல்வேண்டும்.( 23: 6-9). அதேநேரம் சாட்சிகளை நன்றாகக்கேட்க வேண்டும், சான்றுகளை ஆராயவேண்டும்,  அத்துடன் கரத்தர் தன்னுடைய நியாயப்பிரமாணத்தில் வெளிப்படுத்திய பிரமாணங்களுக்கமைய தீர்மானங்களை மேற்கொள்ளல் வேண்டும்.
6. சாட்சிகளுக்கான சட்டங்கள்:- சாட்சிகள் கர்த்தரின் நாமத்தில் உண்மைகளைச் சொல்லவேண்டும்.(லேவி.19:16) அப்படி அவர்கள் உண்மை சொல்லத் தவறும்பட்சத்தில் கர்த்தராலே நியாயந்தீர்க்கப்படுவார்கள். அவர்களுடைய ஏமாற்றல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் இந்த வழக்கிற்குரிய சகல குற்றங்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.( யாத். 23: 1-3, உபா. 19:15-19).பெரிய குற்றங்களுக்கான தீர்ப்புச் சொல்லுவதற்கு இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் விசாரிக்கப்படல் வேண்டும்.( எண். 35:30). உண்மையில் ஒரு சாட்சியை மட்டும்வைத்துக்கொண்டு  யாரையும் குற்றம்சுத்தி தீர்ப்பளிக்கமுடியாது. எழுத்து மூலமான சான்றுகள் அல்லது வேறுசாட்சிகள் சான்றுகளாக ஏற்றுக் கொள்ளமுடியும்.(உபா. 17:6, 19:18)
7. சட்டத்தைச் செயற்படுத்துவதற்கான சட்டங்கள்:- நீதிமன்றத்தீர்ப்புக்கு மறுப்புத் தெரிவித்தால் அவன் சாகக் கடவன்.( உபா. 17:12-13)பழைய இஸ்ரவேல்மக்கள்நியாயாதிபதிகளாகவும் தலைவர்களாகவுமிருந்தார்கள். .( உபா. 16:18) வழக்காமாக ஒரு வேலையைச் செய்துமுடிக்கும் நடவடிக்கைகள் அந்நாட்டு பிரஜைகளின்கைகளிலேயே விடப்பட்டிருந்த்து.(உபா. 13: 9-10, 15:11)
8. அடைக்கலப்பட்டணங்களுக்கான சட்டங்கள்: :- அடைக்கலப் பட்டணத்திற்குள் நுழைவதற்கான அனுமதி நியாயாதிபதிகளிடமேயுண்டு. தவறுதலாக மனித கொலைகள் செய்தவர்கள் இந்த நகரங்களுக்குள் பாதுகாப்பிற்காக ஓடித் தங்களைக் காத்துக் கொள்வார்கள். தேசத்தின் பிரதான ஆசாரியன் மரிக்கும்போது, இவ்வாறு அடைக்கலம்கோரியவர்கள் எந்தவித தண்டனையுமின்றி தங்கள் வீட்டிற்குப்போகமுடியும்.(யாத். 21:12-14) உபாகமம்.19: 1-13) இவ்வகையான நகரங்களுக்குச் செல்வதற்கான பாதைகளை பாதுகாப்பானதாக வைத்துக் கொள்ளவேண்டியது இஸ்ரவேலினது பொறுப்பாகும், தப்பி ஓடுகிறவர்கள்  பழிவாங்கத் தேடு கிறவர்களின் கையினின்று பாதுகாக்கப்படுவார்கள்..
9. தீர்க்க தரிசிகளுக்காக சட்டங்கள்:- விக்கிரக வணக்கங்களை நியாயப்பிரமாணம் கண்டிப்பாகத் தடைசெய்கிறது அத்துடன் விக்கிரக ஆராதனைக்கு வழிநடத்துபவர்கள் மரணத்திற்கு உட்படுத்தப் படுவார்கள்.ஒரு உண்மையான தீர்க்கதரிசியை அறிவது அவரினால் மேற்கொள்ளப்படும் அற்புதங்களினால் அல்ல ஆனால் கர்த்தருக்கு உண்மையாயிருப்பதும் அவருடைய வெளிப்படுத்தலுக்கு உண்மையா யிருப்பதுவுமேயாகும். (Deut 18:20-22 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறை வேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத்  துணிகரத்தினால் சொன்னான்;  அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.) மற்றப்படி பார்க்கும்போது உண்மையான தீர்க்கதரிசிகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்படிந்தேயாகவேண்டும். அவர்கள் கீழ்படியாமல் போகும்பட்சத்தில் , கர்த்தர் அந்த மக்களைத்தண்டிபார்.
10.  இராணுவத்தை நிர்வகிப்பதற்கான சட்டங்கள்.:-  இராணுவத்தை நிர்வகித்தல் குடியியல் சட்டத்தின் இரண்டாவது வகையைச் சார்ந்ததாகும். பாலஸ்தீனர்கள் யாவரும் கர்த்தருக்குச் சொந்தமானவர்களாவர். எல்லைகளைப்பாதுகாப்பதற்காக தங்கள் எல்லைகளுக்குள் போர்செய்வதற்கான கட்டளைகள் கொடுக்கப் பட்டவர்க ளாகும். எல்லா 20 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.( எண். 1: 21-43) 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு விலக்களிப்பு உண்டு.(எண். 4:3,23) சிறிய யுத்தங்கள் நடைபெறும்போது திருவுளச்சீட்டுமூலம் வீர்ர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். (எண். 31: 3-6) இராஜாவுக்குப் பாதுகாப்பாக சிறிய தொகை இராணுவமே அமர்த்தப்படும். எதிரகளின் தாக்குதல்களின்போது பாதுகாப்பவராக கர்த்தரே அவர்களுக்காகச் செயற்பட்டார்.( உபாக. 23: 9-14)
11. சில பிரஜைகள் இராவத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாகும்.:- ஆசாரியர்களும் லேவியர்களும் ( எண்.1 48-49) புதிதாக்கட்டியவீட்டை பிரதிஸ்டை செய்யாமலிருப்பவர்களும், (உபா.20:5) வயல்நிலத்தில் அறுவடை செய்து முடிக்கா தவனும், திரட்சைத்தோட்டத்தில் அறுவடைசெய்து முடிக்காதவனும்(உபா.: 20:6)ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன். (Deut 20:7) யுத்த அழைப்பிற்கு ஒருவருடத்திற்குள் திருமாகிய எவனும்(உபா: 24:5)
12. எல்லா யுத்தங்களும் பரிசுத்த யுத்தமாகும்— அதாவது,  கர்த்தரின் தலைமையில் நடக்கும் யுத்தங்களாகும். ஆகவேதான் தன்னுடைய இராணுவத்திற்காக கர்த்தரே முன்னின்று யுத்தம் செய்து பாதுகாப்பார்.( உபா. 20:1-4) அத்துடன் எதிரிகள்மீது இயற்கை அழிவுகளையும் உண்டாக்குவார்.(யோசுவா 10:11, 24:7) கர்த்தருடைய பாதுகாப்புத் தேவையாகவிருந்தால் நாம் பாவத்திலிருந்து விலகியிருக்க வேண்டும், கர்த்தருக்கு பிரதிஸ்டை செய்தவர்களாயிருத்தல் வேண்டும், அத்துடன் போர்முனையில் அவருடைய வழிநடத்தலைப் பின்பற்ற வேண்டும்.( உபா.23:9-14). கர்த்தரே பிரதான கட்டளையிடும் அதிகாரியாக விருக்கிறார், அத்துடன் வெற்றிபெற்றதற்கான சகல மகிமையும் அவருக்கே உரியதாகும்.( எண். 10:9-10)பாலஸ்தீனத்திற்குள் காணப்படும் இஸ்ரவேலர்களல்லாதவர்கள் யாவரும் கொலை செய்யப்படல் வேண்டும். அத்துடன் அவர்களின் உடமைகள் ,சொத்துக்கள் யாவும் கர்த்தருக்குக் கொடுக்கப்படல் வேண்டும்.( உபா. 20: 16-18, 2:34, 3:6). அதாவது, அவர்கள் தங்கள் எல்லைகளைப் பரிசுத்தம் பண்ணக்கடவர்கள், அத்துடன் கானானிய விக்கிரகங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளக்கடவர்கள். பாலஸ்தீனத்திற்கு வெளியே இஸ்ரவேலர்கள் யுத்தம் செய்யும் போது , யுத்ததாக்குதலுக்கு உட்படுத்தப்படும் நகரத்தை தாக்குவதற்கு முன்னாகா சமாதானத்திற்காக ஒப்புக் கொடுத்தல் வேண்டும். அவர்கள் சமதானத்தை ஏற்கமறுத்தால் நீ அவர்களோடு யுத்தம்செய்யலாம். யுத்தத்தில் நீவெற்றியடையும் பொது சகல பிரஜைகளும் சொத்துக்களும் சட்டப்படி அடிமைகளாக்கப்படுவார்கள்.( உபா. 20: 10-15நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.Deut 20:11 அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ் செய்யக்கடவர்கள்.(Deut 20:12 அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு,Deut 20:13 உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,Deut 20:14 ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.(Deut 20:15 இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.)
13 குற்றவாளிகளுக்கு மதிப்பளிப்பதற்கான சட்டம்.:- விஷேசித்த சட்டவிரோத குற்றங்கள் குடியியல் சட்டத்தின் மூன்றாவது பிரில் அடங்குகின்றது. சட்டவிரோத குற்றம் என்றால் என்னவென்று கர்த்தர் நியாயப்பிரமாணத்தில் சிறப்பாக வகையறுத்துக் கூறுகின்றார். அவற்றுக்கு சரியான தண்டனைகள் என்னவென்றும் கூறப்பட்டுள்ளன. குற்றங்கள்சகலதும் பாவமாகும். குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகளும் மாறுபடும்.இஸ்ரவேலர்கள் குற்றவாளி களுக்கு அதிகபட்சதண்டனை கொடுப்பதை கர்த்தர் தடைசெய்கிறார்.(உபா. 25:1-3)(Deut 25:1 மனிதருக்குள்ளே வழக்குண்டாய், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நியாயஸ்தலத்திலே வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள்.
(Deut 25:2 குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழே கிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத் தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன்.(Deut 25:3 அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாய் அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம்.

No comments:

Post a Comment