Sunday, 10 February 2013

நியாயப்பிரமாணம்:


நியாயப்பிரமாணம்


மேசேயின் நியாயப்பிரமாணத்தில் காணப்படும் “கண்ணுக்கு கண்” என்பது கொடுமையானதும் இரக்கமற்றதுமல்ல. ஆனால் நியாப்பிரமாணத்தில் காணப்படும் சமமான சட்டமாகும்.( யாத். 21:24). ஒவ்வொரு குற்றவாளியும் கூலி கொடுத்தேயாகவேண்டும்.( எண். 35:31). பாகால் வணக்கமுள்ள தேசங்களில் பணக்காரர் தங்கள் குற்றங்களுக்காக பணத்தை தண்டமாகக் கொடுத்து தப்பமுடியும். கர்தரின் நியாயப்பிரமாணமானது விதவைகள், தகப்பனற்ற பிள்ளைகள், அடிமைகள், அந்நியன் ஆகியோருக்கு இழைக்கப்படும்  அநீதிகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகின்றது.( யாத்.21:2, 20-21: , 22:21-23)
லேவியராகமம் 17-26 ல்  எந்விதமான சமயச்சடங்குகளுக்கான கர்த்தருடைய வழிகாட்டலும் இல்லாதபோதும் பல கல்விமான்கள்  இதனை  “ பரிசுத்த சட்டதொகுப்பு” எனக் கூறுகிறார்கள்”, ஆனால்  இந்த அதிகாரங்கள் தேவாலயம் பற்றியதும்,பொது ஆராதனை பற்றியதுமானதும், சமயச்சடங்குகள், நன்நெறிகள்  சார்ந்த குறிப்புகளையும் தன்னைப்போல் அயலவனை நேசிப்பதுப்றியுமே  கொண்டுள்ளன.  (லேவி. 19:18). இஸ்ரவேல் தேசத்தார் மற்ற தேசத்தாரை விட்டுப் பிரிந்திருக் வேண்டும் என்றும் கூறுகின்றது, அத்துடன் கர்த்தர் பரிசுத்தமானவராகையால் பல சட்டத் தொகுப்புக்கள் பாகால் வணக்கத்தைத்  தடைசெய்கின்றது.(21:8)
உபாகமப்புத்தகம் சில வேளைகளில் உபாகமச் சட்டத் தொகுப்பு என  அழைக்கப்படுகிறது. இதில் நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. என்பது அடங்கியுள்ளது.( உபாக. 6:5) பத்துக் கற்பனையின் இரண்டாம் பதிவுபோல் இது காணப்படுகிறது (உபா. 5)
வேதாகத்திலுள்ள  சட்டத் தெகுப்புக்கள் மனிதர்களினால் இயற்றப்பட்ட சட்டத் தொகுப்புக்களிலும்பார்க்க மேலானது. கர்த்தர் மக்களிடம் என்னத்தை எதிர்பார்க்கிறார் என்பதையே வேதாகமச் சட்டங்கள் கூறுகின்றன. இவை கர்த்தருடைய தன்மைகளை வெளிக்காட்டும் நித்திய நன்நெறிக் கொள்கையில் தங்கியுள்ளது. ஆகவேதான் (பத்துக்கறபனை) வேதாகம நியாயப்பிரமாணம் என்பது நன்நெறிச் சட்டத்தின் சுருக்கமாகும். இது உலகிற்கான அடிப்படை நன்நெறிக் கொள்கையாகும்.

No comments:

Post a Comment