திருமணம்:-தன்னுடைய மிகநெருங்கின உறவினரையும், குடும்ப அங்கத்தவர்களையும் திருமணம் செய்வதை இஸ்ரவேலருக்குள் கர்த்தர் தடைசெய்துள்ளார். (Lev. 18:6–18; Deut. 27:20–23). கானானியருக்குள் கலப்புத் திருமணம் செய்தலாகாது ஏனெனில் அவர்கள் பாகால்வணக்கத்திற்கு வழிநடத்துவார்கள். (Deut. 7:1–4). ஆனால் அவர்கள் கானானியர்கள் மனம்மாறி இஸ்ரவேலராக வந்தால் திருமணம் செய்வதற்கு எந்தத் தடையுமில்லை. யுத்தகாவலிலுள்ள பெண்ணை, அவளுடைய பெற்றோர் இறந்திருந்தால் அவர்களுக்கா ஒரு மாதம் துக்கம் கொண்டாடியபிற்பாடு திருமணம் செய்யமுடியும்.அவளுடைய கணவன் இறந்திருந்தால் அவள் சுயாதீனமானவள். அவளுடைய திருமணம் அவளை சட்டப்படி இஸ்ரவேலராக ஏற்றுக்கொள்ளும்.
ஆசாரியர்களின் திருமணத்திற்காக ஒரு விஷேடசட்டம் உண்டு. அவன்கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்.விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புகுலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன். (Lev. 21:7, 13–15).
திருமணபந்நத்தில் ,பெண்கள் சீதனம்செலுத்துவதில் சட்டத்தின்மூலம் பாதுகாக் கப்படுகின்றார்கள். கணவன் இறந்தால் அல்லது விவாகரத்துச் செய்தால் மனைவிக் குப்பெரும் தொகைப்பணம்கொடுக்கப்படல் வேண்டும்.பெரும் குற்றம் செய்பவர்கள் பெரும் தொகைப் பணத்தை குற்றத் தொகையாகக் கட்டவேண்டும். மனைவியைத் தன்னுடைய சொந்த மாமிசமாக நடத்தவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். (Deut. 21:10–14).
தகப்பனையும் தாயையும் பிள்ளைகள் கனம்பண்ண வேண்டும். (Ex. 20:12)பெண்களின் மாதவிடாய்காலத்தில் அவளுடன் உடலுறவு கொள்ளல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு மனைவி பிள்ளைப்பெறும் வயதில், பிள்ளைகள் இல்லாமல் கணவன் மரித்துவிட்டால், அவனுடைய கிட்டத்து உறவினர் அவளைத்திருமணம் செய்து, பிள்ளைகள்பெற்று குடும்ப அந்தஸ்தைக் காப்பாற்றுவனாக. (Deut. 25:5–10).இவ்வகை யான நடவடிக்கைள் குடியியல் சட்டத்தின்படி ஏற்பாடுசெய்யப்படல் வேண்டும்.
குடும்பத்தில் கணவனுக்கே முதன்மை அதிகாரம் கொடுத்தல் வேண்டும். எல்லா விஷயங்களிலும் மனைவியானவள் கணவனுக்கு கீழ்பட்டவளாக இருத்தல் வேண்டும். இது கணவனுக்கு கீழானவள் என்றோ அல்லது அடிமையானவள் என்றோ பொருள்படாது, ஆனால் அவர்கள் இருவரும் ஒருமாமிசமானவர்கள்
வாடகை அடிமை:- பணக்கார்ரின் சூழ்ச்சிகளின் பிடியிலிருந்து கர்த்தர் ஏழைகளைப் பாதுகாக் கின்றார். பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்கார னுடைய கூலி விடியற் காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது. (Lev. 19:13; Deut. 24:14).
அடிமைகள்:-அடிமைகள் இரண்டுவகைப்படும், சட்டப்படியான அடிமை, நிரந்தர அடிமை. கடன்கொடுக்கமுடியாமல் இருக்கும் இஸ்ரவேலர்கள் சட்டப்படியான அடிமையாவார்கள், அல்லது தற்கால அடிமையாகவிருக்கலாம். அடிமைக்காலம் ஆறுவருடங்களுக்கு நீடிக்கும் அல்லது
சொத்து உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள்:- குடியியல் சட்டத்தில் அடங்கியுள்ள அடுத்தபெரிய சட்டமே சொத்து உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமாகும். கீழே காட்டப்படுபவை இந்தச் சட்டங்களில் அடங்கும்.
தொலைந்துபோன சொத்துக்கள்:-மோசேயின் நியாயப்பிரமாணங்களின் கீழ் எல்லா தொலைந்துபோன சொத்த்துக்களும் அதன் உரிமையாளர் யார் என்று கணடுபிடிக்கப் பட்சத்தில் அல்லது அவரால் உரிமைகோரும் பட்சத்தில் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுக் கப்படல் வேண்டும். (Deut. 22:1–4).
பாதுகாப்பற்ற சொத்துக்கள்:- பாதுகாப்பற்றசொத்துக்களுக்கு(மிருகம்) அதன் உரிமையாளரே பொறுப்பாளியாவார். ஒருவரின் சொத்தினால் வேறுநபர் பாதிக்கப்படுவாராகில் அதன் உரிமையாளரே குற்றம் கட்டவேண்டும். மரணம் ஏற்பட்டால் அந்த உரிமையாளரின் சொத்தும்(மிருகம்) சாகடிக்கப்படல் வேண்டும். (Ex. 21:28–36; Deut. 22:8).
நிலத்தின் உரிமையாளர்:-உண்மையில் கர்த்தரே நிலத்தின் உரிமையாளராவார். (Lev. 25:23). தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவர்கள் அதனை ஏழாவது வருஷத்தில் பயிர்செய்யாமல் இளைப்பாறவிடும்படிவேண்டிக் கொள்கிறார். (Lev. 25:1–7).ஏழாம்வருடத்தில் பயன்தரும் நிலங்களின் அறுவடையை அறுக்காமல் வழிப்போக்கர்களுக்கும் வறியவர்களும் சாப்பிடும்படி விடப்படுதல்வேண்டும். சில குறிப்பிட்ட நிலங்களை குறிப்பிட்ட குடும்பங்கள் பயிர்செய்து பிழைக்கும்படி விடப்படல் வேண்டும். 50தாவது வருடத்தில் அதன் உரிமையாளர்களிடம் அந்த நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படல் வேண்டும். (Lev. 25:8–24)
சுதந்தரித்துக் கொள்வதற்கான சட்டங்கள்:-சாதாரணமாக சட்ரீதியான பிள்ளைகளுக்கு குடும்பச் சொத்துக்களைச் சுதந்தரிக்கும் உரிமையுண்டு. மூத்தமகனுக்கு மற்றப் பிள்ளைகளைவிட இரண்டுபங்கு சுதந்திரம் உண்டு. (Deut. 21:15–17; 25:6). மூத்தமகன் தனது வயதுசென்ற பெற்றோரைப்பராமரித்து அவர்கள் மரிக்கும் வேளையில் அவர்களை அடக்கம்செய்வதும் அவரது கடமை.யாகும். துஷ்டமகனுக்கு அதில் பங்குகிடையாது. ஆண்பிள்ளைகள் இல்லாதவிடத்துபெண்பிள்ளைகளுக்கு அந்தச் சொத்துக்கள் செல்லும்.அந்தப் பெண்பிள்ளை தங்கள்சொந்தத்திற்குள்ளேயே திரமணம் செய்தல்வேண்டும். (Num. 36:1–12).
நன்றி......
No comments:
Post a Comment