Thursday 21 February 2013

நியாயப்பிரமாணம்:


கருணை நடவடிக்கைகள்  சார்பான நியாயப்பிரமாணங்கள்.:- கர்த்தருடைய நியாயப்பிரமாணமானது பாதுகாப்பற்ற மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் பாதுகாப்பளிக்கின்றது.
மிருகங்களின் பாதுகாப்பு:- இவ்வகையான சட்டங்கள் சூழலுக்குரிய சட்டங்களாகும். உதாரணமாக,  7ம் வருடத்தில் இஸ்ரவேலர்கள் நிலத்தைப் பயிரிட வேண்டாம் என்று கட்டளையிடப்பட்டுள்ளார்கள். எதாவது கனிமரமோ அல்லது தானி யங்களோ வளர்ந்திருந்தால் அவற்றை வறுமைப்பட்டவர்களுக்காகவும், மிருகங் களுக்காகவும் விடப்படல்வேண்டும்.இவ்வகையான செயற்பாடுகள் சுழற்சிப் பயிர்செய்கையை ஊக்குலிக்கின்றது.(Ex. 23:11–12; Lev. 25:5–7). வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத் தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது. தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும். உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனோடேகூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக. (Deut. 25:4).மிருகங்கள்மீது அதிகபாரம் சுமத்த க்கூடாது அத்துடன் அவற்றை அடித்துத் துன்புறுத்தக்கூடாது. அவைகளும் சபாத் நாளில் ஓய்வெடுக்கவேண்டும். (Ex. 20:8–11; 23:12; Deut. 22:1–4).
மனிதவர்க்கத்திற்கான பாதுகாப்பு:- விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக. அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; (Ex. 22:21–25).அவர்களின் சுய கௌரவத்தைப்  பாதுகாப்பதற்காக தொழில் வாய்ப்புக்கள் செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்குரிய சம்பளம் சரியாக்க் கொடுக்க வேண்டும்.( (Deut. 24:14–15, 19–22).
உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.
நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.(Lev. 25:35–37). வயதானவர்கள் கனம்பண்ணப்படல் வேண்டும். (Lev. 19:32). பிரயாணத்திலிருப்பவர்கள் தோட்டத்திற்குள் சென்று தாங்கள் சாப்பிடக்கூடியவற்றை எடுத்துக் கொள்ளலாம் மேலதிகமாக எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. (Deut. 23:24–25).
தனியாளுக்குரியதும் குடும்பத்துக்குரியதுமான சட்டங்கள்:- குடியியல் சட்டத்தில் இதுமிகவும் பரந்த அளவைக் கொண்டுள்ளது. கீழ்குறிப்பிடப்படும் விடயங்கள் இவற்றில் அடங்கும்.
பெற்றோரும் பிள்ளைகளும்:-பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உடுத்தி உணவூட்டிப் பராமரித்தல் வேண்டும்.தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்தில் திறம்பட வளர்த்தல் வேண்டும். (Deut. 6:6–7).
தகப்பனுக்குரியகடமைகள்—- பிள்ளைகளை விருத்தசேதனம் செய்தல், (Gen. 12–13) முதற்பேறானவைகளை கர்த்தரிடமிருந்து மீட்டுக் கொள்ளல்(எண். 18: 15-16) பிள்ளைகளுக்கு நல்ல திருமணம் செய்து கொடுத்தல் ( ஆதி 24: 4) பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படியும்படி கட்டளையிடப் பட்டுள்ளார்கள்.( யாத். 20:12).  பெற்றோரை அடித்தல், சபித்தல், என்ப மரணதண்டனைக்குரிய குற்றமாகும். (மதுபானம் அருந்துதல், பிடிவாதம் செய்தல்,) (Ex. 21:15, 17; Deut. 21:18–21).  சிறுபிள்ளைகள் பெற்றோரின் பராமரிப்பிலிருக்கின்றபடியால் அவர்கள் எந்தப் பொருத்தனையும் செய்யமுடியாது.. திருமணம் செய்யாத பெண்பிள்ளைகளும் தகப்பனாரின் சம்மதமின்றி பொருத்தனைகளை செய்யமுடியாது. ( எண். 30: 3-5)

No comments:

Post a Comment