நியாயத்தீர்ப்பு வருகிறது சந்திக்க ஆயத்தப்படுங்கள்
தீமையைவெறுத்தலும் கர்த்தரை அறிந்து அவரது கட்டளைப்படி நடத்தலும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியாகும். கர்த்தர் தன்னுடைய நியாயப்பிரமாணத்தைக் காத்துநடப்பவர்களுக்கும் , அதன்படி நடக்காதவர்களுக்கும் நியாயத்தீர்ப் வைத்துள்ளார். நல்லதைக்காத்து நடக்கிறவர்கள் நன்மையையும், தங்கள் இஸ்டத்திற்கு கடவுள்பயமற்று தீமையான வாழ்வை நடத்தி கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பையுங் கொடுத்து கர்த்தர் நியாயந்தீர்ப்பார். வேதாகமம் யோவான் 5ம் அதியாரம் 25-30 வரை கூறுவதைக் கண்நோக்கிப் பார்ப் போமாக.”மரித்தோர்தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், பிதாவானவர்தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும்அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனைஅடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்;எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.” மரித்தவர்களும் உயிரோடு இருப்பவர்களும் நியாயத்தீர்படைவது நிச்சயமாகும்
வேதாகமத்தின்படி இறுதி நியாயத்தீர்ப்பு மிக மிக முக்கியமானதாகும், சரித்திரத்தின் இறுதியில் நன்மைசெய்தவர்கள் வேறாகவும், தீமைசெய்தவர்கள் வேறாகவும் பிரிக்கப்படுவார்கள். அதற்குரிய காலம் கர்த்தரால் நியமிக்கப்பட்டுள்ளது. (Act 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். ) ஆனால் இந்த நாள்கள் பிதாவைத் தவிர வேறுயாருக்கும் தெரியாது. மத்தேயு 24ம் அதிகாரத்தில் 36-40 இவ்வாறு கூறுகின்றது. (அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும்,ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். )
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் மனிதவர்க்கத்தின் நியாகேர்த்தர் ஒருவரேயிருந்தார். அவரிடத்தில் நியாயந்தீர்ப்பதற்கான வல்லமையும், ஞானமும், இருந்த்து, அவர் அவர் நீதியாகவும், உண்மையாகவும், நியாயமாகவும் நீயாயந்தீர்ப்பார். சங்கீதம் 96:13, 98: 9 என்ன கூறுகின்றது எனப்பார்ப் போம்.( Psa 96:13 அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார். Psa 98:9 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். )
நியாயந்தீர்க்கும் வேலையை தன்னுடைய ஒரேபேறான குமாரனாகிய கிறிஸ்துவிற்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மத்தியஸ்தராகவும்,தன்னுடைய மக்களை பாவத்திலிருந்து விடுவிப்பவராகவும், கர்த்தருடைய பகைவர்களை அழிப்பவராகவும் செயற்படு கின்றார்.(யோவான் 5:22) நியாயத்தீர்ப்பின் பின்பு இடம்பெறும் அரசாட்சியில் கர்த்தருடைய பிள்ளைகளும் கிறிஸ்துவுடன் இணைந்து செயற்படுவார்கள். (1 Cor. 6:2–3; Rev. 20:4)(. 1Co 6:2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? 1Co 6:3 தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி? Rev 20:4 அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். )
இறுதி நியாயத்தீர்ப்பானது விசாலமான நோக்கத்தைக் கொண்டுள்ளது, இது சரித்திரத்தின் ஆரம்பம்முதல் இறுதிவரையுள்ள எல்லாவிதமாதேசத்துமக்களையும் உள்ளடக்கியது, விழுந்துபோன தூதர்களைப்போல.(Matt. 25:31–46; Rom. 14:10–12, (2 Pet. 2:4).). கர்த்தர்மீது நம்பிக்கைகொண்டு, பாவத்திலிருந்து மனம்திரும்பி, கர்த்தருடைய வழியில் நடப்போருக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை, ஆனால் நித்திய வாழ்விற்குள் அவர்கள் பிரவேசிப்பார்கள்( சங்கீதம்.1) நியாயத்தீர்பின் பிரதானநோக்கம் தெரிவுசெய்யப்பட்டவர்களாயிருந்து இரட்சிப்பைக் கொற்றுக்கொண்டு அதன்படி நடந்தவர்கள் அனைவரும் கர்த்தருடைய மகிமையைப்பெற்றுக் கொள்வார்கள், கர்த்தரைவெறுத்து அவர்வழிகளில் நடக்காதயாவரும் ஆக்கினைத்தீர்ப்பிற்குள்ளாக்கப்படுவார்கள். (2 Thess. 1:3–10

No comments:
Post a Comment