Tuesday, 19 February 2013

நியாயப்பிரமாணம்:


  • கொலைசெய்தல்:- மனித உயிரை திட்டமிட்டுக் கொலைசெய்தல்  கொலைத் தண்டனைக்குரிய குற்றமாகும். எதிர்பாராது கொலை செய்தல், யுத்த்த்தில் கொலை செய்தல், சட்டப்படி கொலைத்  தண்டனையை  நிறைவேற்றல் என்பன  சட்டவிரோத  மனித கொலையாக்க்  கருதப்படமாட்டா.( யாத். 21: 12-14,  எண். 35: 14-34). ஆறாவது கட்டளை “ கொலை செய்யாதிருப்பாயாக” என்பதாகும். இயேசு இதனை மேலும் சிறப்பாக விளக்கி ​ தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளாதே என்றும், வீணனென்றும் , மூடனே என்றும்  சொல்லவேண்டா ம் எனக் கூறியுள்ளார். ( மத் 5: 21-22)
  • தாக்குதல் செய்தல்:- ஒருவரோடொருவர் சமாதானமாக வாழும்படி கர்த்தரின்  நியாயப்பிரமாணம் கூறுகின்றது. ஆனால் அவ்வாறான குற்றங்கள்  ஏற்படுகின்றன,  தாக்குதல் சம்பந்தமான சட்டங்களை கர்த்தர் ஏற்படுத்தியுள்ளார். ஒருவரைக் காயப்படுத்தி  அவரது நேரத்தை வீணடித்தால், காயப்படுத்தியவர் அதற்குரிய பணத்தை கட்டவேண்டும். அவ்வாற வழக்குகளில் நீதிமன்றம் அதற்குரிய குற்றப் பணத்தைத்  தீர்மானிக்கும். ( யாத்.21: 18-19)
காயப்பட்டவர்  அடிமையாயிருந்தால், அவனுக்கு அங்கக் குறைபாடு ஏற்பட்டால்,. குற்றம்புரிந்தவருக்கு பெரும் பணச் செலவு ஏற்புடும.  அல்லது அந்த அடிமை இறந்தால், அக்குற்றத்தைப் புரிந்தவரும்  சாகவேண்டும். அந்த அடிமை பிழைத்திருந்து  அங்கக் குறைவு ஏற்படாமலிருந்தால், அக்குற்றம் புரிந்தவருக்கு தண்டனையில்லை.( யாத். 21: 20-21, 26-27)
மகளோ அல்லது மகனோ பெற்றோரை தாக்கித்துன்ப்பபடுத்தினால்  தாக்கியவர்  கொலை செய்யப்படக்கடவர். ( யாத் 21: 15) புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக் கொண்டிருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவன் மானத்தைப் பிடித்ததுண்டானால்,அவளுடைய கையைத் தறிக்கக்கடவாய்; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம். (உபா. 25:11–12).

No comments:

Post a Comment