திரும்பி வா…
மனம்
திருந்தி வா…
இறைவனின் அன்பையும் இரக்கத்தையும் எண்ணிப்பார்க்கும் காலம் இது. உலகில் நடைபெறும் பாவச்செயல்களையும் குற்றங்களையும் நினைத்து மனம் வருந்தும் காலம் இது. கொஞ்ச நேரம் கண்ணை ழூடி, இன்று உலகில் நடைபெறும், நடைபெற்ற பாவங்கள், குற்றங்கள், திட்டமிட்ட தவறுகள் இவைகளை நினைத்துப் பாருங்கள். கணக்கிட முடியாது. கற்பனை செய்ய முடியாது. அவ்வளவு பயங்கரம். அவ்வளவு கொடூரம். அவ்வளவு அயோக்கியத்தனம்.
ஒவ்வொரு தனி மனிதனும் சிறிது பெரிதாக செய்கின்ற தவறுகள் ஏராளம் ஏராளம். நீங்கள் உங்களுக்கு எதிராக, கணவன் மனைவி மக்களுக்கு எதிராக இன்றைக்குச் செய்த மிகச் சிறிய தவறுகள் குற்றங்கள் எத்தனை. இப்படி உலகம் எங்கும் எத்தனை ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டு இருக்கின்றன.
இந்த நாற்பது நாட்களும் இந்த தவறுகளைத் தவிர்த்து, புனிதமான சிந்தனையும் செயலும் நம்மில் அதிகமாக்கிட வேண்டும். ஆண்டவரோடு உள்ள உறவை அதிகமாக்க, செபம், கோயில், வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். கூடுதலாக சில அன்புச் செயல்கள். தான தர்மங்கள், ஏழைகளுக்கு உதவுதல் செய்யுங்கள். உங்களின் சில ஆசைகளை அடக்கி, தேவைகளைக் குறைத்து, நோன்பிருந்து அந்த சேமிப்பை உங்களது நலத்திட்டமாக உதவுங்கள். தவக்காலம் அருளின் காலமாக உங்களுக்கு அமையும்.
No comments:
Post a Comment