Thursday 28 February 2013

வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்.

உடன்படிக்கைமேற்கொள்ளப்பட்டிருந்தால் கிடைத்திருக்கும் நன்மை:
   1 . மரணம் ஏற்பட்டிருக்காது.. நித்திய ஜீவன் ஏற்பட்டிருக்கும்
  1. 2.      ஏதேன்  தோட்டத்திலிருந்துவெளியேற்றப்பட்டிருக்கமாட்டார்கள்.
  2. 3.      பாவம் அற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்திருப்போம்.
  3. 4.      அனுதினமும் தேவனுடன் பேசிக் கொண்டிருந்திருப்போம்.

உடன்படிக்கை முறிவடைந்த்தால் ஏற்பட்ட தீமை  .
  1. 1.      பாவம் ஏற்பட்டது
  2. 2.      ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டமை.
  3. 3.      தேவனுக்கும் மனிதனுக்குமிடையில் தொடர்பற்ற நிலை.
  4. 4.      பிசாசுடன் மனிதனுக்கு தொடர்புகள்  ஏற்பட்டமை.
ஆதாமுடனான உடன்படிக்கை.மீறப்பட்டதனால் ஏற்பட்ட விளைவு.(Gen. 3:14–19)
ஆதாம் உடன்படிக்கையை ஏதேன் தோட்டத்தில் மீறியதனால்
சாபம் கொட்கப்பட்டது
  • வீழ்ச்சிக்குப்பிற்பாடு  கர்த்தர் பழையபாம்பை சபித்தார்,
  • அத்துடன் பாம்பிற்கும் ஏவாளுக்குமிடையில் பகையை உண்டாக்கினார்.
  • அத்துடன் பாம்பிற்கும் கிறிஸ்துவிற்குமிடையில் பகையை உண்டாக்கினார். ( ஸ்திரியின் வித்து கிறிஸ்துவாகும்)
  • சாத்தான் கிறிஸ்துவை காயப்படுத்துவான் என்றும் கிறிஸ்து பாம்பை அழித்துப் போடுவார் என்றும் சாபம் வந்தது.
  • பெண்கள் கணவனின் ஆளுகைக்குள் வருவார்கள் என்றும் பிள்ளை பெறும் போது வேதனையை அனுபவிப்பார்கள் என்றும் சாபமிடப்பட்டது.
  • பூமியான சபிக்கப்பட்டது பயிரிடும் காலங்களில் களைகளின் தொல்லையை அனுபவிப்பான் என்றும் கட்டளையிடப்பட்டது.
  • அவன் மரணமடையும்வரை நெற்றிவியர்வை சிந்தி வாழ்வான் என்றும் கட்டளையிடப்பட்டது.
  1. நோவாவுன் செய்த உடன்படிக்கை (Gen. 8:20–9:27)
  • ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிற்பாடு ஜனங்கள் பாவம்செய்தபடியால் கர்த்தர் மனுஷனை உண்டாக்கியதற்காக மனஸ்தாப்ப்பட்டார். அதன்பயனாக நோவா என்கிறவரின் குடும்பத்தைத்தவிர மிகுதியானவர்களை உலகத்திலிருந்து அழித்துவிட முடிவு செய்து உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழித்தார்.
  • பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,
  • உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையைஏற்படுத்துகிறேன்.
  • இனி மாம்சமானவைகளெல்லாம்ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவ தில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப் பிரளயம் உண்டாவதில்லை யென்றும், உங்களோடே என் உடன் படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவ ஜந்துக்களுக்கும்,
  •  நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடை யாளமாக: நான் என் வானவில்லை மேகத்தில் வைத்தேன்;
  • அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வானவில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
  •  அந்த வானவில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.
  • இங்கு ஜலப்பிரளயத்தினால் மக்களை அழித்த்தைக்குறித்து அவர் மனதில் சஞ்சலம் கொள்வது போல ஒருதேற்றத்தை எம்மால் அவதானிக்க முடிகிறது. மனிதனின் பாவச் செயல்களை ஏற்றுக் கொள்ளமுடியாமலே அவர்கோபங் கொண்டு மனிதவர்க்கம் அனைத்தையும் அழித்தார். நோவாவின் குடும்பத்திற்கூடாகவரும் சந்ததியாவது தன்னை ஆராதிக்கும் என்றும் தன்னோடு தொடர்பில் இருக்கும் என்றும் நம்பினார். அதுமட்டுமல்ல இந்தக்குடும்த்தினூடாகவே பிந்தின ஆதாமாகிய இயேசுவும் வரவேண்டியிருந்தபடியால் அவர் நோவா குடும்பத்தைக் காப்பாற்றினார்.
  • நோவாவிற்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். அதில் காம் என்பவனின் தவறாநடத்தைன காரணமாகச் சபிக்கப்பட்டான். அவன் சேம், யாபெத் என்பவர்களுக்கு அடிமையாகவே ஜீவித்தான்.
  • சேமுடைய சந்ததியில்மேசிய பிறப்பதற்கான கிருபையைக் கொடுத்தார்.
  • யாபேத் விருத்தியாகி சேமுடைய கூடாரங்களில் வாழ்ந்து வந்தான்.
இங்கும் தன்னை ஆராதிக்க மறந்த மக்களையேதேவன் பார்க்கிறார். தன்னை ஆராதிக்கும் படி எதிர்பார்த்தவர்கள் ஒருவரையும்  காணவில்லை. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும்,நெருப்பையும் வணங்கும் மக்களையே அவரால் காணமுடிந்த்து. உருவாக்கிய தேவனை மறந்து அவரால் உருவாக்கப்பட்டவற்றை வணங்குபவர்களையே அவரால் காணமுடிந்தது.

Daily Bible Verse:

I தெசலோனிக்கேயர்
5 அதிகாரம்

    24. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
    Faithful is he that calleth you, who also will do it.

Wednesday 27 February 2013

Daily Bible Verse:

நீதிமொழிகள்
12 அதிகாரம்

    26. நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
    The righteous is more excellent than his neighbour: but the way of the wicked seduceth them.

    27. சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.

    The slothful man roasteth not that which he took in hunting: but the substance of a diligent man is precious.

Tuesday 26 February 2013

Daily Bible Verse:

நீதிமொழிகள்
12 அதிகாரம்

    28. நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
    In the way of righteousness is life; and in the pathway thereof there is no death.

வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்.

  1. 1.      ஏதேன் தோட்டதில் ஆதாமுடன்செய்யப்பட்ட உடன்படிக்கை.:-
  • ஆண்டவர் முதல் மனிதனை உருவாக்கினார்.  Ge. 1:27
  • அவனை பல்கிப் பூமியை நிரப்பும்படி கட்டளையிட்டார் Ge.1;28
  • அவனுக்கு சகல மீருகங்கள் மீதும் ஆளுகையைக் கொடுத்தார் Ge.1:28
  • தோட்டத்பை பராமரித்து அதில் கிடைக்கும் பலனை அனுபவிக்க் கூறினார். Ge.1;29
  • நன்மை தீமை அறியும் மரத்தின் பழத்தை மட்டும் சாப்பிடவேண்டாம் என்று கூறினார்.. அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்..(Gen 2:16


ஏதேன்தோட்டத்து உடன்படிக்கை மிகவும் முக்கியமானதாகவுள்ளது. இங்கு எல்லாக்கனிகளையும் நீங்கள்புசிக்கலாம், ஆனால் நன்மை தீமை அறிந்து கொள்ளும்  விருட்சத்தின் கனிகளை மட்டும் புசிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக சொன்னார். அது மட்டுமன்றி அதைச் சாப்பிட்டால் கண்டிப்பாகச் சாகவே சாவாய்என்று கூறினார். இங்கு இந்த உடன்படிக்கையை மீறும் பொழுது மரணம் நிச்சயம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இங்கு ஆண்டவர் சொல்லாமல் கூறியுள்ள விடயம் ஒன்று மறைந்து காணப்படுகின்றது, அதாவது அந்தக்கனியை மட்டும் நீ சாப்பிடாமல் எனது உடன்படிக்கையைக் காத்து நடந்தால் உனக்கு மரணமே இல்லை என்பதாகும்..ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும்உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று அவர் மனுஷனைத் துரத்திவிட்டு,ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக்கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும்வைத்தார். Gen 3: 22-24)

இங்கு நாம் உற்றுநோக்கும் போது மிகவும் துக்கமான சம்பவத்தை காணமுடிகிறது. அதாவது ஜீவ்விருட்சத்தின் கனியை புசிப்பதற்குப்பதிலாக தடைசெய்யப்பட்ட பழத்தை உண்டு தனக்குத்தானே மரணத்தை வருவித்த்து மட்டுமல்லாமல் பரம்பரைக்கே மரணத்தை வருவித்துக் கொண்டார்கள். அதாவது முதலில் அவர்களுக்கு ஏற்பட்டது ஆவிக்குரிய மரணமாகும். அதன் விளைவு கர்த்தருடைய ஆவிக்கும் இவர்களுடைய ஆவிக்குமிடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. இன்னும் விளக்கமாக கூறுவதானால் மனிதனுக்கு ஆண்டவரால்கொடுக்கப்பட்ட ஜீவ ஆத்துமாவின் ஒருபகுதியாகிய ஆவியின் செயற்பாடு அணைந்து போயிற்று .பாவம் ஆவியின் செயற்பாட்டை செயலிழக்கச் செய்யும். அதுமட்டுமல்லாமல் அசுத்த ஆவியின் செயற்பாட்டை உள்வாங்க சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆகவே உடன்படிக்கைகளை மீறாமல்வாழ முயற்சி செய்வோம்.

Jesus Christ:





Daily Bible Verse:

II சாமுவேல்
22 அதிகாரம்

    33. தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
    God is my strength and power: And he maketh my way perfect.

Monday 25 February 2013

Bible Verse Image:


வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்.

(Gen. 1:28–30; 2:16, 17) உடன்படிக்கை என்பது பல வாக்குறுதிகளை உள்ளடக்கிய இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கையாகும். இருபகுதினரும் இந்த உடன்படிக்கையைக்  காத்துக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டு , உடன்படிக்கை முறிவடையாமல் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இருவரில் ஒருவரின் செயற்பாட்டால் உடன்படிக்கை முறிவடையும் போது இருபகுதியினரும் பாதிக்கப்படுவார்கள். வேதாகமத்தில் பல உடன்படிக்கைகள் காலத்திற்குக் காலம் ஏற்படுத்தப்பட்டதையும் அதனை மேற்கொண்டு நடந்திருந்தால் ஏற்பட்டிருக்கும்  நன்மைகளையும் அவை முறிவடைந்ததால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் அவதானம் செலுத்துவோமாக.

உடன்படிக்கைமேற்கொள்ளப்பட்டிருந்தால் கிடைத்திருக்கும் நன்மை:
   1 . மரணம் ஏற்பட்டிருக்காது.. நித்திய ஜீவன் ஏற்பட்டிருக்கும்
  1. 2.      ஏதேன்  தோட்டத்திலிருந்துவெளியேற்றப்பட்டிருக்கமாட்டார்கள்.
  2. 3.      பாவம் அற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்திருப்போம்.
  3. 4.      அனுதினமும் தேவனுடன் பேசிக் கொண்டிருந்திருப்போம்.

உடன்படிக்கை முறிவடைந்த்தால் ஏற்பட்ட தீமை  .
  1. 1.      பாவம் ஏற்பட்டது
  2. 2.      ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டமை.
  3. 3.      தேவனுக்கும் மனிதனுக்குமிடையில் தொடர்பற்ற நிலை.
  4. 4.      பிசாசுடன் மனிதனுக்கு தொடர்புகள்  ஏற்பட்டமை.

Daily Bible Verse:

ஏசாயா
40 அதிகாரம்

    29. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
    He giveth power to the faint; and to them that have no might he increaseth strength.

Sunday 24 February 2013

Daily Bible Verse:

I யோவான்
2 அதிகாரம்

    5. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
    But whoso keepeth his word, in him verily is the love of God perfected: hereby know we that we are in him.

Daily Bible Verse:

நீதிமொழிகள்
3 அதிகாரம்

    5. உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
    Trust in the LORD with all thine heart; and lean not unto thine own understanding.

Saturday 23 February 2013

Sunday Morning Worship:



இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக!


நியாயத்தீர்ப்பு வருகிறது சந்திக்க   ஆயத்தப்படுங்கள்
தீமையைவெறுத்தலும் கர்த்தரை அறிந்து அவரது கட்டளைப்படி  நடத்தலும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியாகும். கர்த்தர் தன்னுடைய நியாயப்பிரமாணத்தைக் காத்துநடப்பவர்களுக்கும் , அதன்படி நடக்காதவர்களுக்கும் நியாயத்தீர்ப் வைத்துள்ளார். நல்லதைக்காத்து நடக்கிறவர்கள் நன்மையையும், தங்கள் இஸ்டத்திற்கு கடவுள்பயமற்று தீமையான வாழ்வை நடத்தி கிறவர்களுக்கு  ஆக்கினைத்தீர்ப்பையுங் கொடுத்து  கர்த்தர் நியாயந்தீர்ப்பார். வேதாகமம்  யோவான் 5ம் அதியாரம் 25-30 வரை கூறுவதைக் கண்நோக்கிப் பார்ப் போமாக.”மரித்தோர்தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், பிதாவானவர்தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும்அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனைஅடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்;எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.” மரித்தவர்களும் உயிரோடு இருப்பவர்களும் நியாயத்தீர்படைவது நிச்சயமாகும்
வேதாகமத்தின்படி இறுதி நியாயத்தீர்ப்பு மிக மிக முக்கியமானதாகும், சரித்திரத்தின் இறுதியில் நன்மைசெய்தவர்கள் வேறாகவும், தீமைசெய்தவர்கள் வேறாகவும்  பிரிக்கப்படுவார்கள். அதற்குரிய காலம் கர்த்தரால் நியமிக்கப்பட்டுள்ளது. (Act 17:31  மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். ) ஆனால் இந்த நாள்கள் பிதாவைத் தவிர வேறுயாருக்கும் தெரியாது. மத்தேயு 24ம் அதிகாரத்தில் 36-40 இவ்வாறு கூறுகின்றது. (அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும்,ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். )

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் மனிதவர்க்கத்தின் நியாகேர்த்தர் ஒருவரேயிருந்தார். அவரிடத்தில் நியாயந்தீர்ப்பதற்கான வல்லமையும், ஞானமும், இருந்த்து, அவர் அவர் நீதியாகவும், உண்மையாகவும், நியாயமாகவும் நீயாயந்தீர்ப்பார். சங்கீதம் 96:13, 98: 9 என்ன கூறுகின்றது எனப்பார்ப் போம்.( Psa 96:13 அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார். Psa 98:9 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். )
நியாயந்தீர்க்கும் வேலையை தன்னுடைய ஒரேபேறான குமாரனாகிய கிறிஸ்துவிற்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மத்தியஸ்தராகவும்,தன்னுடைய மக்களை பாவத்திலிருந்து விடுவிப்பவராகவும், கர்த்தருடைய பகைவர்களை அழிப்பவராகவும் செயற்படு கின்றார்.(யோவான் 5:22) நியாயத்தீர்ப்பின் பின்பு இடம்பெறும் அரசாட்சியில் கர்த்தருடைய பிள்ளைகளும் கிறிஸ்துவுடன் இணைந்து செயற்படுவார்கள். (1 Cor. 6:2–3; Rev. 20:4)(. 1Co 6:2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? 1Co 6:3 தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி? Rev 20:4 அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். )
இறுதி நியாயத்தீர்ப்பானது விசாலமான நோக்கத்தைக் கொண்டுள்ளது, இது சரித்திரத்தின் ஆரம்பம்முதல் இறுதிவரையுள்ள எல்லாவிதமாதேசத்துமக்களையும் உள்ளடக்கியது, விழுந்துபோன தூதர்களைப்போல.(Matt. 25:31–46; Rom. 14:10–12, (2 Pet. 2:4).). கர்த்தர்மீது நம்பிக்கைகொண்டு, பாவத்திலிருந்து மனம்திரும்பி, கர்த்தருடைய வழியில் நடப்போருக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை, ஆனால் நித்திய வாழ்விற்குள் அவர்கள் பிரவேசிப்பார்கள்( சங்கீதம்.1) நியாயத்தீர்பின் பிரதானநோக்கம் தெரிவுசெய்யப்பட்டவர்களாயிருந்து இரட்சிப்பைக் கொற்றுக்கொண்டு அதன்படி நடந்தவர்கள் அனைவரும் கர்த்தருடைய மகிமையைப்பெற்றுக் கொள்வார்கள், கர்த்தரைவெறுத்து அவர்வழிகளில் நடக்காதயாவரும் ஆக்கினைத்தீர்ப்பிற்குள்ளாக்கப்படுவார்கள். (2 Thess. 1:3–10

Friday 22 February 2013

Daily Bible Verse:

எண்ணாகமம்
6 அதிகாரம்

    25. கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
    The LORD make his face shine upon thee, and be gracious unto thee:

நியாயப்பிரமாணம்:


திருமணம்:-தன்னுடைய  மிகநெருங்கின உறவினரையும், குடும்ப அங்கத்தவர்களையும் திருமணம் செய்வதை இஸ்ரவேலருக்குள் கர்த்தர் தடைசெய்துள்ளார். (Lev. 18:6–18; Deut. 27:20–23). கானானியருக்குள் கலப்புத் திருமணம் செய்தலாகாது ஏனெனில் அவர்கள் பாகால்வணக்கத்திற்கு வழிநடத்துவார்கள். (Deut. 7:1–4). ஆனால் அவர்கள் கானானியர்கள் மனம்மாறி இஸ்ரவேலராக வந்தால் திருமணம் செய்வதற்கு எந்தத் தடையுமில்லை. யுத்தகாவலிலுள்ள பெண்ணை, அவளுடைய பெற்றோர் இறந்திருந்தால் அவர்களுக்கா ஒரு மாதம் துக்கம் கொண்டாடியபிற்பாடு திருமணம் செய்யமுடியும்.அவளுடைய கணவன் இறந்திருந்தால் அவள் சுயாதீனமானவள். அவளுடைய திருமணம் அவளை சட்டப்படி இஸ்ரவேலராக ஏற்றுக்கொள்ளும்.
ஆசாரியர்களின் திருமணத்திற்காக ஒரு விஷேடசட்டம் உண்டு. அவன்கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்.விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புகுலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன். (Lev. 21:7, 13–15).
திருமணபந்நத்தில் ,பெண்கள் சீதனம்செலுத்துவதில் சட்டத்தின்மூலம் பாதுகாக் கப்படுகின்றார்கள். கணவன் இறந்தால் அல்லது விவாகரத்துச் செய்தால் மனைவிக் குப்பெரும் தொகைப்பணம்கொடுக்கப்படல் வேண்டும்.பெரும் குற்றம் செய்பவர்கள் பெரும் தொகைப் பணத்தை குற்றத் தொகையாகக் கட்டவேண்டும். மனைவியைத் தன்னுடைய சொந்த மாமிசமாக நடத்தவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். (Deut. 21:10–14).
தகப்பனையும் தாயையும் பிள்ளைகள் கனம்பண்ண வேண்டும். (Ex. 20:12)பெண்களின் மாதவிடாய்காலத்தில் அவளுடன் உடலுறவு கொள்ளல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு மனைவி பிள்ளைப்பெறும் வயதில், பிள்ளைகள் இல்லாமல் கணவன் மரித்துவிட்டால், அவனுடைய கிட்டத்து உறவினர் அவளைத்திருமணம் செய்து, பிள்ளைகள்பெற்று குடும்ப அந்தஸ்தைக் காப்பாற்றுவனாக. (Deut. 25:5–10).இவ்வகை யான நடவடிக்கைள் குடியியல் சட்டத்தின்படி ஏற்பாடுசெய்யப்படல் வேண்டும்.
குடும்பத்தில் கணவனுக்கே முதன்மை அதிகாரம் கொடுத்தல் வேண்டும். எல்லா விஷயங்களிலும் மனைவியானவள் கணவனுக்கு கீழ்பட்டவளாக இருத்தல் வேண்டும். இது கணவனுக்கு கீழானவள் என்றோ அல்லது அடிமையானவள் என்றோ பொருள்படாது,  ஆனால் அவர்கள்  இருவரும் ஒருமாமிசமானவர்கள்
வாடகை அடிமை:- பணக்கார்ரின் சூழ்ச்சிகளின் பிடியிலிருந்து கர்த்தர் ஏழைகளைப் பாதுகாக் கின்றார். பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்கார னுடைய கூலி விடியற் காலம்மட்டும்  உன்னிடத்தில்  இருக்கலாகாது. (Lev. 19:13; Deut. 24:14).
அடிமைகள்:-அடிமைகள் இரண்டுவகைப்படும், சட்டப்படியான அடிமை, நிரந்தர அடிமை. கடன்கொடுக்கமுடியாமல் இருக்கும் இஸ்ரவேலர்கள் சட்டப்படியான அடிமையாவார்கள்,  அல்லது தற்கால அடிமையாகவிருக்கலாம். அடிமைக்காலம் ஆறுவருடங்களுக்கு நீடிக்கும் அல்லது
சொத்து உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள்:- குடியியல் சட்டத்தில் அடங்கியுள்ள அடுத்தபெரிய சட்டமே சொத்து உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமாகும். கீழே காட்டப்படுபவை இந்தச் சட்டங்களில் அடங்கும்.
தொலைந்துபோன சொத்துக்கள்:-மோசேயின் நியாயப்பிரமாணங்களின் கீழ் எல்லா தொலைந்துபோன சொத்த்துக்களும் அதன் உரிமையாளர் யார் என்று கணடுபிடிக்கப் பட்சத்தில் அல்லது அவரால் உரிமைகோரும் பட்சத்தில் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுக் கப்படல் வேண்டும். (Deut. 22:1–4).
பாதுகாப்பற்ற சொத்துக்கள்:- பாதுகாப்பற்றசொத்துக்களுக்கு(மிருகம்) அதன் உரிமையாளரே பொறுப்பாளியாவார். ஒருவரின் சொத்தினால் வேறுநபர் பாதிக்கப்படுவாராகில் அதன் உரிமையாளரே குற்றம் கட்டவேண்டும். மரணம் ஏற்பட்டால் அந்த உரிமையாளரின் சொத்தும்(மிருகம்) சாகடிக்கப்படல் வேண்டும். (Ex. 21:28–36; Deut. 22:8).
நிலத்தின் உரிமையாளர்:-உண்மையில் கர்த்தரே நிலத்தின் உரிமையாளராவார். (Lev. 25:23). தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவர்கள் அதனை ஏழாவது வருஷத்தில் பயிர்செய்யாமல் இளைப்பாறவிடும்படிவேண்டிக்  கொள்கிறார். (Lev. 25:1–7).ஏழாம்வருடத்தில் பயன்தரும் நிலங்களின் அறுவடையை அறுக்காமல் வழிப்போக்கர்களுக்கும் வறியவர்களும் சாப்பிடும்படி விடப்படுதல்வேண்டும். சில குறிப்பிட்ட நிலங்களை குறிப்பிட்ட குடும்பங்கள் பயிர்செய்து பிழைக்கும்படி விடப்படல் வேண்டும். 50தாவது வருடத்தில் அதன் உரிமையாளர்களிடம் அந்த நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படல் வேண்டும். (Lev. 25:8–24)
சுதந்தரித்துக் கொள்வதற்கான ​சட்டங்கள்:-சாதாரணமாக சட்ரீதியான பிள்ளைகளுக்கு குடும்பச் சொத்துக்களைச் சுதந்தரிக்கும் உரிமையுண்டு. மூத்தமகனுக்கு மற்றப் பிள்ளைகளைவிட இரண்டுபங்கு சுதந்திரம் உண்டு. (Deut. 21:15–17; 25:6). மூத்தமகன் தனது வயதுசென்ற பெற்றோரைப்பராமரித்து அவர்கள் மரிக்கும் வேளையில் அவர்களை அடக்கம்செய்வதும் அவரது கடமை.யாகும். துஷ்டமகனுக்கு அதில் பங்குகிடையாது.  ஆண்பிள்ளைகள் இல்லாதவிடத்துபெண்பிள்ளைகளுக்கு அந்தச் சொத்துக்கள் செல்லும்.அந்தப் பெண்பிள்ளை தங்கள்சொந்தத்திற்குள்ளேயே திரமணம் செய்தல்வேண்டும். (Num. 36:1–12).
நன்றி......



Thursday 21 February 2013

Daily Bible Verse:

சங்கீதம்
31 அதிகாரம்

    24. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
    Be of good courage, and he shall strengthen your heart, all ye that hope in the LORD.

நியாயப்பிரமாணம்:


கருணை நடவடிக்கைகள்  சார்பான நியாயப்பிரமாணங்கள்.:- கர்த்தருடைய நியாயப்பிரமாணமானது பாதுகாப்பற்ற மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் பாதுகாப்பளிக்கின்றது.
மிருகங்களின் பாதுகாப்பு:- இவ்வகையான சட்டங்கள் சூழலுக்குரிய சட்டங்களாகும். உதாரணமாக,  7ம் வருடத்தில் இஸ்ரவேலர்கள் நிலத்தைப் பயிரிட வேண்டாம் என்று கட்டளையிடப்பட்டுள்ளார்கள். எதாவது கனிமரமோ அல்லது தானி யங்களோ வளர்ந்திருந்தால் அவற்றை வறுமைப்பட்டவர்களுக்காகவும், மிருகங் களுக்காகவும் விடப்படல்வேண்டும்.இவ்வகையான செயற்பாடுகள் சுழற்சிப் பயிர்செய்கையை ஊக்குலிக்கின்றது.(Ex. 23:11–12; Lev. 25:5–7). வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத் தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது. தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும். உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனோடேகூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக. (Deut. 25:4).மிருகங்கள்மீது அதிகபாரம் சுமத்த க்கூடாது அத்துடன் அவற்றை அடித்துத் துன்புறுத்தக்கூடாது. அவைகளும் சபாத் நாளில் ஓய்வெடுக்கவேண்டும். (Ex. 20:8–11; 23:12; Deut. 22:1–4).
மனிதவர்க்கத்திற்கான பாதுகாப்பு:- விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக. அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; (Ex. 22:21–25).அவர்களின் சுய கௌரவத்தைப்  பாதுகாப்பதற்காக தொழில் வாய்ப்புக்கள் செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்குரிய சம்பளம் சரியாக்க் கொடுக்க வேண்டும்.( (Deut. 24:14–15, 19–22).
உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.
நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.(Lev. 25:35–37). வயதானவர்கள் கனம்பண்ணப்படல் வேண்டும். (Lev. 19:32). பிரயாணத்திலிருப்பவர்கள் தோட்டத்திற்குள் சென்று தாங்கள் சாப்பிடக்கூடியவற்றை எடுத்துக் கொள்ளலாம் மேலதிகமாக எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. (Deut. 23:24–25).
தனியாளுக்குரியதும் குடும்பத்துக்குரியதுமான சட்டங்கள்:- குடியியல் சட்டத்தில் இதுமிகவும் பரந்த அளவைக் கொண்டுள்ளது. கீழ்குறிப்பிடப்படும் விடயங்கள் இவற்றில் அடங்கும்.
பெற்றோரும் பிள்ளைகளும்:-பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உடுத்தி உணவூட்டிப் பராமரித்தல் வேண்டும்.தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்தில் திறம்பட வளர்த்தல் வேண்டும். (Deut. 6:6–7).
தகப்பனுக்குரியகடமைகள்—- பிள்ளைகளை விருத்தசேதனம் செய்தல், (Gen. 12–13) முதற்பேறானவைகளை கர்த்தரிடமிருந்து மீட்டுக் கொள்ளல்(எண். 18: 15-16) பிள்ளைகளுக்கு நல்ல திருமணம் செய்து கொடுத்தல் ( ஆதி 24: 4) பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படியும்படி கட்டளையிடப் பட்டுள்ளார்கள்.( யாத். 20:12).  பெற்றோரை அடித்தல், சபித்தல், என்ப மரணதண்டனைக்குரிய குற்றமாகும். (மதுபானம் அருந்துதல், பிடிவாதம் செய்தல்,) (Ex. 21:15, 17; Deut. 21:18–21).  சிறுபிள்ளைகள் பெற்றோரின் பராமரிப்பிலிருக்கின்றபடியால் அவர்கள் எந்தப் பொருத்தனையும் செய்யமுடியாது.. திருமணம் செய்யாத பெண்பிள்ளைகளும் தகப்பனாரின் சம்மதமின்றி பொருத்தனைகளை செய்யமுடியாது. ( எண். 30: 3-5)

Wednesday 20 February 2013

JESUS CHRIST:






Daily Bible Verse:

வெளி
3 அதிகாரம்

    8. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
    I know thy works: behold, I have set before thee an open door, and no man can shut it: for thou hast a little strength, and hast kept my word, and hast not denied my name.

நியாயப்பிரமாணம்:


உரியகாலத்திற்குமுன் பிள்ளை பெறுதல்:- ஒரு சண்டையின் போது ஒருபெண் உரியகாலத்திற்குமுன்  பிள்ளை பெறுவதோ அல்லது மரணம் ஏற்பட்டாலோ, அந்தப்பெண்ணை அடித்தவர் மரணத்திற்குள்ளாக்கப்படுவார். இந்த சண்டையின் காரணமாக குறைப்பிரவசம் ஏற்படுமாயின் அற்காக குற்ப்பணத்தை நீதிமன்றத்தீர்ப்பின் பிரகாரம் கட்டல்வேண்டும்.
பலவந்தமாய் கற்பழித்தல் :- திருமணஉறுதிசெய்யப்பட்ட பெண்ணைக் பலவந்தமாய் கற்பழிக்கும் ஒரு நபர் சாகடிக்கப்படக்கடவன். ( உபா. 22: 25—27). ஒருவருக்கும் நியமிக்கப்படாத பெண்ணைக் பலவந்தம் பண்ணிக் கற்பழித்தால் அவன் அதிக பணம்செலவுசெய்யவேண்டும் அத்துடன் திருமண ஏற்பாடும் செய்தல் வேண்டும். தகப்பன் திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்துப் பணத்தைத் தான்வைத்துக் கொள்ள முடியும். அவர் சம்மதம் தெரிவிப்பாராகில் பலவந்தம்பண்ணினவர் திருமணம்செய்யமுடியும், ஆனால் விவாகரத்துக் கோரமுடியாது.( யாத். 22: 16-17, உபா.22.: 28—29). கற்பழிக்கப்பட்ட பெண் நியமிக்கப்பட்ட அடிமையாயிருந்தால், அவளைச் சேர்த்து வைக்கக் கூடாது. அதேநேரம் கற்பழித்தவர் மரணத்திற்கு ஒப்புக் கொடுக்கப்படமாட்டார். ஆனல் கர்த்தருக்கு முன்பாகசெய்த பாவத்திற்காக  குற்றநிவாரணபலி செலுத்தல் வேண்டும்.
கொடுமைப்படுத்தல்.:-தங்கள்உரிமைகளைச் செயற்படுத்த முடியாமலிருப் பவர்களைக் கர்த்தர் பாதுகாக்கின்றார். பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டவேண்டாம். குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் . உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக .யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்த வேண்டாம். செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக. விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக(Ex. 22:21–24; Lev. 19:14, 33; Deut. 24:14; 27:18–19).
பலவந்தமாய்க்கடத்திச் செல்லல்.:- ஒரு மனிதனைக் கடத்திச்சென்று விற்பனைசெய்தல்  அல்லது அவனை அடிமையாகப்பாவிப்பது கடும் குற்றமாகும்.( உபா. 24:7) இந்தத் தடை அந்நியருக்கும் பொருந்தும்.( யாத். 22: 21-24) குருடருக்கும் செவிடருக்கும் பொருத்தமாகும். (லேவி. 19:14) சகல ஜனங்களுக்கும் பொருத்தமானது. ( உபா. 27: 18-19,  )
சொத்துக்களுக்கு எதிராகச்செய்யப்படும் குற்றச் செயல்கள்:- வேதாகமச் சட்டமானது மற்றய நாட்டுச் சட்டங்களைப் போன்றதல்ல, சொத்துக்களைவிட மனித உயிர்கள் பெறுமதிமிக்கவை என கருதுகின்றது. ஆனால் சொத்துக்களை வைத்திருப்பதற்கும் அவற்றை களவு,மோசடி என்பவற்றிலிருந்து பாதுகாப்பதற்கும் அனுமதிக்கின்றது. கீழே கூறப்படும் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளன.
அச்சுறித்திப்பணம்பறித்தலும் கடன்மோசடி செய்தலும்.:- இவ்வாறான குற்றங்களை கர்த்தரின் நியாயப்பிரமாணத்தில் களவகவே கருதப்படுகின்றது. இவற்றிற்கு அதிகபட்ச தண்டனை குற்றமாகக் கொடுக்கப்படுகின்றது. (Ex. 22:1–3; Lev. 6:1–7).
நிறையிலும் படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.:-ஆதிகால இஸ்றவேலர்கள் பணத்திற்கு வியாபாரம் செய்யவில்லை, மாறாக கொடுக்கல்வாங்கல்கள் விலைஉயர்ந்த உலோகங்கள் நிறுத்துக் கொடுக்கப்பட்டன. தவறான அளவுகளைப்பாவித்து ஏமாற்றுவதைக் கர்த்தர் தடைசெய்கின்றார், அதனைக்களவாகவே கருதி அதற்குத் தண்டனை கொடுக்கப்படுகின்றது. (Deut. 25:13–16, Lev. 19:35–36).
தொலைந்த மிருகங்கள்.- பழைய இஸ்ரவேலர்களின் நாட்களில் “ கண்டுபிடிப்போர், பாதுகாப்போர்” அலைந்துதிரந்து காணாமல்போகும் மிருகங்கள் உரிமையாளர்களிடம் திரும்பவும் ஒப்படைத்தல் வேண்டும். உன்னுடைய எதிராளியின் எருது அல்லது கழுதை தொலைந்து போனதை நீ கண்டால் அவற்றை மீண்டும் அவனிடம் கொண்டுவந்துசேர்க்க வேண்டும்.. ,” (Ex. 23:4–5; Deut. 22:1–4).
எல்லைகள்:- நலங்கள் அதன் அளவுகளுக்கேற்ப எல்லைக்குறியிடப்பட்டு அடையாளப்படுத்தப்படும். இந்த எல்லைக்குறிகளை அகற்றுதல் அல்லது மாற்றுதல் கர்த்தரின் சாபத்திற்கேதுவானது. இது அயலவனிடம் களவுசெய்தலுக்கு ஒப்பானது அத்துடன் பெரிய நிலச் சொந்தக்கார்ராகிய கர்த்தருக்கு விரோதமான குற்றச் செயலாகும். (Deut. 19:14; 27:17).