Thursday 31 January 2013

Daily Bible Study:


நியாயத்தீர்பு என்றால் என்ன?
நியாயத்தீர்ப்பு என்பது மனிதர்களின் தெரிவிற்கும் செயற்பாட்டிற்கும் இறைவனால் கொடுக்கப்படும் பதிலாகும்.
நாங்கள் ஏன் நியாயந்தீர்க்கப்படுகிறோம்.?
கர்த்தர் பரிபூரணமானவர். அவர் மனிதவர்க்கத்தை சுயாதீனமாக சிந்தித்து தன்னைத் தெரிவுசெய்வதற்கும், தள்ளிவிடுவதற்கும் பூரணசுதந்திரம் கொடுத்துள்ளார், இந்த தெரிவுசெய்வதற்கு ஏற்ப நியாத்தீர்ப்பும் அமையும்.
நியாயத்தீர்ப்பின் அழிவிலிருந்து யார் பாதுகாக்கப்படுவார்கள்?
இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவர்வழியில் சீவிப்பவர்கள் யாவரும் நியாயத்தீர்ப்பின் அழிவிலிருந்தும் தண்டனையிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.
எவ்வாறு ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்?
பூமியில் வாழ்ந்த யாவரும் அதாவது மரித்தோரும் உயிருடன் இருப்போரும் தங்கள் பாவத்திற்கு ஏற்ப இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
(தினசரி பைபிள் ஆய்வு)

No comments:

Post a Comment