Monday, 15 April 2013

மீட் நினைவு ஆயர் மண்டல திருச்சபையின் வரலாறு:



மண்டைக்காடு திருச்சபை :
இந்திய திருநாட்டின் தென்கோடியம் கன்னியாக்குமரி மாவட்டத்தில்,கல்குளம்  தாலுக்காவில்,அரபிக்கடல் ஓரத்தில்,இயற்க்கை  துறைமுகமாம் குளச்சலுக்கு 3 கிலோ மீட்டருக்கு கிழக்கும்,இந்திய நாட்டின் சிறந்த கிராமமாய் திகழ்ந்ததும் அபூர்வ மணல் ஆலையைத் தன்னகத்தே கொண்டதுமான,மணவாளக்குறிச்சி  கிராமத்திற்கு 3 கிலோ மீட்டர்க்கு மேற்கும் ,மருத்துவ சேவையில் உலக புகழ் பெற்றுதிகழும் நெய்யூர் 6 கிலோ மீட்டர் தெற்கிலும் ,இயற்க்கை எழிலுடன் அமையப்பெற்ற மண்டைக்காடு பேரூரில் 161 ஆண்டுகளாய் இறை  இயேசுவின் மறை வழி நின்று இறையொளி வீசி ,கலங்கரை விளக்காய் திகழ்கின்றது எம் திருச்சபை.
                          
மறைதிரு வில்லியம் தொபியஸ் ரிங்கல் தௌபே
     இவர் ஜெர்மன் தேசத்தில்,புருஷியா மாகாணத்தில்,ஷீடல் உயிட்ஸ் என்னும் கிராமத்தில்,1770-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தியதி பிறந்தார்.இவரது தகப்பனார் ஓர் லுத்தரன் மிஷன் போதகர் ஆவர்.சுவிஷேசம் சொல்லப்படாத இடத்திற்கு சென்று நற்செய்தி கூற வேண்டும் என்ற தணியாத தாகம் இவர் உள்ளத்தில் சிறுவயதிலே உருவாகிவிட்டது.டென்மார்க்கிலுள்ள ஹோலி பல்கலைகழகத்திலும் வேத சாஸ்திரம் கற்று போதகபிஷேகம் பெற்றரர் .பின்னர் ளீயுமு மிஷனரி சங்கத்தினரின் சார்பாக 1797-ம் ஆண்டில் கல்கத்தாவில் ஊழியம் நிறைவேற்ற வந்தார். ஆனால் போர்ச்சுகீசியர்களுக்கும்,ஆங்கிலேயர்க்கும் மட்டுமே ஊழியம் செய்ய நேர்ந்தமையால்,இந்திய மக்களுக்கு இறைவார்த்தை கூற தருணம் கொடுக்காததாலும்,நிராசையுடன் இங்கிலாந்திற்கு திரும்பிசென்றார்.
     லண்டன் மாநகரில் நடந்த பரிசுத்தாவி எழுப்புதல் கூட்டங்களில் கலந்து கொண்ட,போது லண்டன் மிஷன் சங்கத்தினரின் ஊழிய அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு அனுப்பபட்டார்.மகிழ்ச்சியாக புறப்பட்டார்.வரும் வழியில் நல்நம்பிக்கை முனையில் இறங்கி மிலேச்ச்சர்களாகிய ஆப்பிரிக்கர்கள் 1803-ஆம் ஆண்டு  டிசம்பர் திங்கள் 4-ம் நாளில் வந்திறங்கினார்.தரங்கம்பாடியில் தமிழ்கற்ற அவர் தன் ஊழியத்திற்கு ஏற்ற தளத்தை தனக்கு காட்டும்படியாய் ஜெபித்தார்.அக்காலத்தில் தஞ்சாவூரில் ஊழியம் செய்த ஹோலாப் ஐயர்இன் அன்பரான வேதமாணிக்கம் என்பவரால்   ரிங்கல்தௌபே அவர்கள் மயிலாடிக்கு வரும்படியாய் அழைக்கப்பட்டார். அழைப்பை ஏற்று தென்திருவிதான்கூருக்கு பயணமானார் . வரும் வழியில் பல இடங்களில் சுவிசேஷம் அறிவித்து , தூத்துக்குடி, பாளையம்கோட்டை, வடக்கன்குளம் போன்ற இடங்களைக்கடந்து அன்றைய ரெசிடண்ட் மெக்காலே. துரையின் அனுமதியுடன் 1806-ம் தேதியன்று திருவிதாங்கூரின் எல்கையான ஆரல்வாய்மொழி கணவாயைக்கடந்து திருவிதாங்கூருக்குள் பிரவேசித்தார் .
மைலாடியில் வந்த அவர், அங்கிருந்த சிறு கிறிஸ்தவ கூட்டத்தாரை சந்தித்தார்.அன்று வேதத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த அவர்களுக்கு உபதேசம் பண்ணியதுடன் மேல்ஜாதியினரால் ஏற்ப்பட்ட பல துன்புறுத்தல்களையும் கஷ்டங்களையும் ஏற்றுக்கொண்டு ஏழைமக்கள் மத்தியில் சுற்றிதிரிந்து தன் ஊழியத்தைத் தொடர்ந்தார்.ஊழியகாலத்தில் கொச்சிக்கு சென்று பயணம் செய்து மெக்காலே துரையைச் சந்தித்து மைலாடியில் ஓர் சபையை நிறுவ அனுமதியைப் பெற்றுக்கொண்டார்.சமயம் கிடைத்தபோது பாளையங்கோட்டை சென்று அங்குள்ள ஊழியர்களை சந்தித்து ஊழியம் குறித்த விவரங்களை பகிர்ந்துகொண்டார்.சில மாதங்களுக்கு பின் மைலாடியில்  40 பேருக்கு திருமுழுக்கு கொடுத்தார்.ஊழியத்தின் தேவை மற்றும் அவசியங்களை குறிப்பிட்டு தலைமை நிலையத்திற்கு கடிதங்களை அனுப்பினார்.
1807-ஆம் ஆண்டில் பிச்சைகுடியிருப்பு(ஜேம்ஸ் டவுண்)சமீபத்தில் கனானூர்  என்னும் கிராமத்தில் ஓர் வீடு வாங்கி அங்கு தங்க ஆரம்பித்தார்.அவர் வீட்டிற்கு அருகிலுள்ள பிராமணர்கள் ஐயர் அவர்களுக்கு துன்பத்தை கொடுத்தனர். ஆனால் நாடார் இன மக்கள் அவரது ஊழியத்திற்கு ஊன்றுகோலாக  இருந்தனர்.
1810-ஆம் ஆண்டில் வேத மாணிக்கம் மகாராசன் தானமாகக்கொடுத்த வயல் நிலத்தில் ஓர் ஆலயத்தைக் கட்டி முடித்தார்.கிறிஸ்தவர்கள் அதிகமாக துன்புறுத்தப்பட்டனர்.அச்சமயம் தக்கலையை அடுத்த உதயகிரிக்கோட்டையில் தங்கி இரண்டு ஆண்டுகள் ஊழியத்தை மேற்கொண்டார்.அத்தருணத்தில் அம்மாண்டிவிளை,மத்திக்கோடு மூலச்சல்,பேயன்குழி,அனந்தனாடார் குடி போன்ற கிராமங்களுக்கும் சென்று ஊழியம் செய்தார்.பஞ்சகாலம் ஏற்ப்பட்டபோது ஜனங்களை ஊக்கப்படுத்தி,கைதொளில்களை பழக்குவித்து தன்னால் இயன்ற ஆதரவினை அளித்தார்.
ஐயரவர்கள் மைலாடியில் தங்கியிருந்த போது 7 சபைகளை உருவாக்கினார்.அச்ச்சபைகளான தாமரைகுளம்,புத்தளம்,ஆத்திக்காடு,பிச்சைக்குடியிருப்பு,கோயில்விளை,ஈத்தாமொழி ஆகிய சபைகளில் ஊழியம் செய்த ஊழியர்களை பயிற்றுவித்து நியமித்தார்.வேதமாணிக்கம் தேசிகரின் தம்பியான மாசிலாமணி அவர்கள் ஈத்தாமொழிக்கும்,தாமரைக்குளத்திற்க்கும் ஊழியர்களாக நியமிக்கப்பட்டார்.மகன் தேவசகாயம் புத்தளம் சபையின் ஊழியராகவும் நியமிக்கப்பட்டார்.வறுமை நிலையை போக்குவதற்காக ரெசிடண்ட் மன்றோவிடம் வேண்டி தாமரைக்குளம் ,வயிலாக்குளம் ஆகிய இரண்டு குளம் சார்ந்த வயல்களை தானமாக பெற்று கொண்டார்.
1809-ஆம் ஆண்டில் மைலாடியிலுள்ள ஆங்கில பாடசாலை ஐயர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது .இதில் ஆங்கிலம் ,தமிழ்,கணக்கு முதலிய பாடங்கள் கற்ப்பிக்கப்பட்டன இதுவே திருவிதாங்கூரில் முதல் ஆங்கில பாடசாலை ஆகும்.1813-ஆம் ஆண்டில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது மக்களுக்கு பெரிதும் உதவினார்.கடின உழைப்பும் கொடிய வறுமையும் அவருக்கு ஈரல்நோயை தோற்றுவித்தது.சுருங்கிய கால்சட்டை கண்டிகள் போட்ட கோட்,கிழிந்த தொப்பி,அருவருக்கதக்கதான ஓர் பாதரட்சை இவைகளே இவருக்கு மிஞ்சியது.பனம்பழம் பலமுறை அவரது பசியை போக்கியது.பொருளாதாரம் மிக குறைவுப்பட்டது.நோயின் கொடூரத்தால் தன் சொந்த நாட்டிற்கு திரும்ப தீர்மானித்தார்.
     ஆகவே 1816-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சபையாரைக்கூடிவர செய்து போஜனம் பரிமாறினார் அப்போது அவர் தரித்திருந்த அங்கியை வேதமாணிக்கம் உபதேசியாருக்கு அணிவித்து அவர் சிரம் மேல் கைவைத்து அவரை ஆசிர்வதித்தார்.பின்னர் 1816 பிப்ரவரி 5-ஆம் நாள் கொல்லத்திலிருந்து கப்பல் ஏறி சென்னை க்கு பயணித்தார். கப்பல் மணக்குடியின் அருகாமையில் வந்தபோது கப்பலை விட்டிறங்கி மைலாடிக்கு வந்து தன் வீட்டு சுவரில் தான் எழுதியிருந்த, தனக்கு கடன்பட்டவர்களின் பெயர்களை அளித்து மறைத்து விட்டு,திரும்பவும் தான் கப்பல் பயணத்தை தொடர்ந்தார். அப்பிரயணத்தை ஆரம்பிக்குமுன் லண்டன் மிஷன் சங்கத்தின் தலைமை அமைப்பிற்கு பின்வருமாறு கடிதம் எழுதி இருந்தார்.

"I am fast decaying and an unfit for active service. My work is done and finished so as to bear the stamp of permanency your money cannot be said to have been lost you will find it in heaven and in the annals of the church of trivancore".
பின்னர் சென்னையிலிருந்து இலங்கைக்கு சென்றார்.கடைசியாக மலாக்கா என்னுமிடத்தில் Rev பில்லியம் மில்னே என்னும் மிஷனறியின் விருந்தாளியாய் இருந்தார்.அதன் பிறகு அவருக்கு என்ன நேரிட்டது என்று திட்டமாக எதுவும் தெரியவில்லை.ஒருவேளை கப்பலில் மரித்து கடலில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பாரும் உண்டு.எவ்விதமாயினும் நம் அருமை இரட்சகரின் இரண்டாம் வருகையின் எக்காளம் தொனிக்கும் போது,சமுத்திரம் தன்னிலுள்ளவர்களை ஒப்புவிக்கும்போது அவரது ஊழியத்தின் பயனாக மீட்கப்பட்டுள்ள நாம் அவரை நேரில் சந்திப்போம் என்ற நம்பிக்கை நமக்குண்டு.
                                              
 மறைதிரு சார்ள்ஸ் மீட் ஐயர்



வணக்கத்துக்குரிய மறைதிரு சார்ள்ஸ் மீட் ஐயர் அவர்கள் இங்கிலாந்து நாட்டிலுள்ள கிளாசஸ்டர் மாகாணத்திலுள்ள  பிரிஸ்டல் பட்டணத்தில் 1792-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஒன்றாம் நாள் பிறந்தார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார்.எனவே தனது தாய் மாமன் மறை திரு ஜாண்ஹண்ட் அவர்களின்  பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.சிறு பருவத்திலேயே இறை பணிக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். ஆனால் இவரோ தேசப்பற்று கொண்டு நாட்டுக்காக இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பினார்.எனினும் அவரது நண்பர்கள் இவரது  இயற்க்கை தாலந்துகளை உற்றுநோக்கி இவர் ஒரு இறைத்தொண்டராக பணியாற்றினால் கடவுள் நாமம் மகிமைப்படும் என எண்ணி அப்பாதையில் அவரை உற்சாகப்படுத்தினர்.இவரும் தன்னை பூரணமாக இறைப்பணிக்காக ஒப்புக்கொடுத்து,1814-ஆம் ஆண்டு லண்டன் மிஷனறி சங்கத்தை தோற்றுவிப்பதற்கு காரணமாக இருந்தவர்களில்  ஒருவராகிய,பண்டிதர் போக் ஐயர் அவர்களின் இறையியல் கற்று தேர்ச்சிப்பெற்றார்.இவருடன் இறையியல் கற்றவர்களில் இவரது நெருங்கிய நண்பர்களாகிய திருவாளர்கள் ஈவன்ஸ்,லவுண்டன் மற்றும் பிரசித்தி பெற்ற நீல் ஐயர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆகும். 
இவர் 1816-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் நாள் ஓர் புதன் கிழமை அன்று தனது 24-வது வயதில்,சிச்செஸ்டர் ஆலயத்தில் வைத்து போதகாபிஷேகம் பெற்றார் பின்னர் தனது தாய்மாமன் மகளான ஆன்ஹண்ட் என்ற பக்தி நெறி கொண்ட பெண்மணியை தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார்.இவரது திருமணம் இஸ்லிங்டன் ஆலயத்தில் வைத்து 1816-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைப்பெற்றது.
    திருமணமான ஒரு சில நாட்களிலேயே  மீட் ஐயர் அவர்கள் லண்டன் மிஷனறி சங்கத்தாரால் இந்திய ஊளியத்திற்க்காக அனுப்பப்பட்டார்.ஐயர் அவர்கள் தனது நற்செய்தி பயணத்தை தனது மனைவியுடன் 1816-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 20-ஆம் நாள் தொடங்கினார்.ஜூன் 30-ஆம் நாளில் நன்னம்பிக்கைமுனை அருகிலுள்ள சைமன்ஷ்குடாவில் வந்து தங்கினர்.பின்னர் அங்கிருந்து ஔரப்பட்டு 1816-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ஆம் நாள் சென்னை வந்து சேர்ந்தனர்.மறைதிரு.லௌலன் ஐயர் அவரும் அவரது குழுவினரும் ஐயர் குடும்பத்தினரை வரவேற்று உபசரித்தனர். பின்னர் சுமார் ஒருவருடக்காலம்தங்கள் உடல்நலம் குறைவின் காரணமாக சென்னியியோ வேப்பேரியில் தங்கினார்கள்.அப்போது ஐயர் அவர்கள் திரு.ஜெரிக் என்பவர் மூலம் தமிழ் மொழி கற்றுக்கொண்டார்.சென்னையில் தங்கியிருக்கும்போது ஐயர் அவர்கள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை சந்தித்து கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு போதித்தார்.1817-ஆம் ஆண்டு  மாதம் மீட் தம்பதியினருக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது.

    1817-ஆம் ஆண்டு செப்டெம்பர் 1-ஆம் நாள் ஐயர் குடும்பத்தினர் தங்கள் பயணத்தை சென்னையிலிருந்து கப்பல் மூலம் தொடங்கினார்.கப்பல் சரக்குகளை இறக்குவதற்காக பிணாங்கு தீவுக்கு செல்லவேண்டியதாக இருந்தது.பிணாங்கு தீவில் வைத்து ஐயர் அவர்களின் மனைவி நோய்வாய்ப்பட்டு
1817-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.மனைவி இறந்த துயரத்தையும் தாங்கி தனது 8 மாத கைக்குழந்தையுடன் ஊழியவாஞ்சையால் தனது பயணத்தை தொடர்ந்து 1817-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குளச்சல் துறைமுகத்தில் அவரது மகன் ஜான் ஹன்டுடன் வந்து இறங்கினார்.பொறுப்பினை ஏற்று  நடத்தி வந்தவருமான திரு.வேதமாணிக்கம் தேசிகர் அவர்களும் அவர்களின் நண்பர்களும் வரவேற்று மையிலாடிக்கு அழைத்து சென்றனர்.துயர சம்பவங்களை கடந்து வந்த ஐயர் அவர்களுக்கு குளச்சல் பகுதியில் இயற்கையும் அவரை வரவேற்றவர்களின் அன்பும் பாசமும் மிக்க மகிழ்ச்சியை அளித்தது. மைலாடியில் மறைதிரு ரிங்கள் தௌபே ஐயர் அவர்கள் தங்கின பங்களாவில் சிறிதுகாலம் தங்கினார்.அப்போது வேதமாணிக்கம் தேசிகர் அவர்கள் மூலம் மிஷினரி பணி தளங்களைப்பற்றி தெரிந்துகொண்டார்.சமூக சமய சூழ்நிலைகளையும் புரிந்துகொண்டார்.குளச்சலுக்கு அருகாமையிலுள்ள கொத்தனார்விளை,கூத்தாவிளை,தறியன்விளை,பண்டாரவிளை,காரியாவிளை,காரவிளை,மண்டைக்காடு, செக்காரவிளை,கோவிலான்விளை ஆகிய இடங்களிலுள்ள ஜனங்களை கூடி ஆராதனை நடத்தினார்.ஐயர் அவர்களும் அடிக்கடி இங்குவந்து ஆராதனைகள் நடத்தியதோடு மண்டைக்காட்டில் தங்கியும் வந்தார்.ஐயர் அவர்கள் கர்னல் மன்றோ துரை அவர்களை நேரடியாக கொல்லத்தில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கூறி தனது வரவை அறிவித்து பல உதவிகளை பெற்றுக்கொண்டார்.
மைலாடி,தாமரைக்குளம்,வெள்ளமடம் ஆகிய இடங்களிலுள்ள மிஷன் பூமிகளைப்பற்றிய விவரங்களையும் ஐயர் அவர்கள் கேட்டு அறிந்துகொண்டார்.வயல்களிலுள்ள நெல்லை சேகரித்து வைப்பதற்கு ஓர் களஞ்சியமும்,அதற்க்கு மேல் பகுதியில் மிஷனறிகள் அவ்வப்போது தங்குவதற்கான அறை மற்றும் பள்ளிக்கூட அறையும் கட்டப்படவேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.
இதற்க்காக 150 பனைமரங்கள் முறிக்கவும்,புன்னார்குளம் பழைய கோட்டையிலுள்ள கற்களை உபயோகிக்கவும்,அங்கு நின்ற வேப்பமரங்களை முறிக்கவும் அரசு அனுமதிப்பெற்று,1500 கோட்டை நெல் கொள்ளும் களஞ்சியத்தை மைலாடியில் கட்டினார்.பஞ்சக்காலங்களில் களஞ்சியத்திலிருந்து நெல் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.நெல் விற்பனை ஒழுங்காகவும் முறையாகவும் நடைப்பெற்றது.ஒரு சக்கரத்துக்கு (1,2 அணா)கூட ஏழைகள் நெல் வாங்க முடிந்தது.அதே நேரத்தில் வேறு எங்கும் இவ்வளவு குறைந்தவிலையில் நெல் கிடைக்கவில்லை.1818-ல் கர்னல் மன்றோவின் பரிந்துரையின் பேரில் ஐயர் அவர்கள் திருவிதாங்கூர் ராணி பார்வதியார்,அப்போது இவரது தலைமையகத்தை மைலாடியிலிருந்து நாகர்கோவிலுக்கு மாற்றினார்.இறை பணிக்காக அனுப்பப்பட்ட இவர் அரசு நீதிபதி பதவியையும் ஏற்றுக்கொண்டதை தலைமை சங்கம் விரும்பவில்லை.எனவே ஒருவருட காலத்திற்குள்ளாகவே தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். 1818-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்னல் மன்றோ அவர்கள் நாகர்கோவிலில் இருந்து தனது சுற்றுபயணம் மாளிகையை  மீட் ஐயர் அவர்களுக்காக விட்டு கொடுத்தார்.நாகர்கோவிலுக்கு  தங்க தங்க வந்தப்பின்,ஐயர் தனது முதல் வேலையாக,தான் தங்கியிருந்த மாளிகையோடு சேர்ந்த 8 கிரவுண்ட் நிலங்களை,அனாதை சாலை,பள்ளிகள்,ஆலயம்,அச்சுக்கூடம் இவைகளை நிறுவும் நோக்கத்த்தோடு வாங்கினார்.மேலும் மைலாடி மற்றும் தஞ்சாவூரிலிருந்து சில குடும்பங்களையும் இங்கு அழைத்துவந்து குடியேற்றவும் விரும்பி செயல்பட்டார்.தர்ம காரியங்களுக்காக நிலங்களை பிரயோஜனம் படுத்தும் தனது திட்டத்தை அரசுக்கு தெரிவித்து வரிச்சலுகையும் பெற்றார்.
ஐயர் அவர்கள் தஞ்சாவூருக்கு சென்று திருப்பணி செய்து வந்த ஹோர்ஸ்டு யாரின் மகள் ஜோகன்னனா செலோஸ்டினாவை 13-01-1819-இல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.இவர்தான் திருவிதாங்கூரில் வேலை செய்த முதல் மிஷனறி அம்மையார்.இவர்களுக்கு 16 பிள்ளைகள் பிறந்தனர். மீட் இயற் அவர்கள் நாகர்கோவிலில்  தங்கியிருந்த பொது,நாகர்கோவிலில் ஓர் ஆலயம் கட்ட திட்டமிட்டார் ஆலயத்திற்கு 1819 ஜனவரி 1-ஆம் நாள் ரிச்சர்ட் நீல் ஐயர் அவர்களால்  அடிக்கல் நாட்டப்பட்டது.ஆலயம் கட்டி முடிக்க 19 ஆண்டுகள் ஆயின.ஆலய கட்டுமான பொருட்களை பெறுவதற்கு மீட் ஐயர் பல நண்பர்களின் உதவியை நாடினார்.தஞ்சாவூர் மகாராஜா ரூ.500-கொடுத்துதவினார்.திருவிதாங்கூர் அரசர் ஆலயத்திற்கு தேவையான மரங்களையும் கற்களையும் ஒரு யானையின் சேவையையும் மற்றும் ரூபாய் மீட் இயற் அவர்கள் நாகர்கோவிலில்  தங்கியிருந்த போது,நாகர்கோவிலில் ஓர் ஆலயம் கட்ட திட்டமிட்டார் ஆலயத்திற்கு 1819 ஜனவரி 1-ஆம் நாள் ரிச்சர்ட் நீல் ஐயர் அவர்களால்  அடிக்கல் நாட்டப்பட்டது.ஆலயம் கட்டி முடிக்க 19 ஆண்டுகள் ஆயின.ஆலய கட்டுமான பொருட்களை  பெறுவதற்கு மீட் ஐயர் பல நண்பர்களின் உதவியை நாடினார். தஞ்சாவூர் மகாராஜா ரூ.500-கொடுத்து உதவினர் .திருவிதாங்கூர் அரசர் ஆலயத்திற்குத் தேவையான மரங்களையும்,கற்களையும் ஒரு யானையின் சேவையையும் மற்றும் ருபாய் இரண்டாயிரமும் மனமுவந்து வழங்கினர்.இவ்வாறு கிடைக்கப்பெற்ற  உதவிகளோடு, தாமரைகுளம் மிஷன் சொத்துகளிலிருந்து பெற்ற வருமானத்தின் ஒரு பகுதியும்,இந்த ஆலய வேலைக்காக செலவிடப்பட்டது .1820-இல் ஐயரின் இன்டாவது மனைவியரின் சுகவீனத்தின் காரணமாக ஐயரவர்கள் தஞ்சாவூர் சென்றார்.அங்கு ஒரு அச்சகத்தை கண்கொண்டு நாகர்கோவிலிலும் ஓர் அச்சகம் அமைத்தார்.
1822-இல் தென் திருவிதாங்கூர் கிறிஸ்தவர்களுக்கு மிகுந்த துன்பமும் கஷ்டமும் ஏற்ப்பட்டன.ஆண்கள் முட்டுக்கு கீழும் தோள் மற்றும் தலையில் தோள் சீலை அணியக்கூடாது அவலநிலையும் காணப்பட்டது.இக்கொடுமையினை களைய மீட் ஐயர் அவர்களும் அவரது துணைவியார் திருமதி ஜோகன்னா செலோஷ்டினா அவர்களும் கடும் முயற்சி மேற்கொண்டனர் பெண்கள் இடுப்புக்கு மேல் குப்பாயம்(ரவிக்கை)அணியும் அதனை தாங்களே வைத்துக்கொள்ளவும் கொண்டுப்போகும்போது மேல் ஜாதி இந்துக்கள் என தங்களை பாவித்து வந்தவர்கள் கிரிச்தவப்பெங்களை தாக்கி அவர்களுடைய மேல் வஸ்திரங்களை கிழித்து எறிந்தனர். பனைமரத்திலிருந்து பதநீர் இறக்குவதற்கும்,வரி கொடுக்க இந்த ஏழை மக்களை அரசு அதிகாரிகள் பலவந்தம் செய்தார்கள்.இதனால் 1822-இல் திருவிதாங்கூர் ராணி கௌரி பார்வதிபாய் அவர்களால் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவர்களான பெண்கள் மேலாடை அணியலாம் அரசு உத்தரவையும் மீட் ஐயர் பெற்று தந்து உதவினார்.
1828-இல் ம்ஷோன் ஊழியமானது இரண்டாக நாகர்கோவில் மற்றும் நெய்யூர் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது.தென்வடக்கான கன்யாகுமரியிலிருந்து திட்டுவிளை வரைக்கும் கிழக்கு மேற்காக கூடங்குளம் முதல் ஆலன்கொட்டை வரைக்கும் உள்ள இடங்களை கொண்டு   நாகர்கோவில் தலைமையிடமாக விளங்கியது.நெய்யூர் மிஷன் பகுதி தென் வடக்காக குளச்சல் முதல் ஆற்றூர் வரைக்கும் கிழக்கு மேற்காக அம்மாண்டிவிளை முதல் திருவனந்தபுரம் வரைக்கும் கொண்டிருந்தது மீட் யாரும் அவர் துணையாரும் 1828-ஆம் ஆண்டில் நாகர்கோவில் மிஷன் பகுதியை மால்ட் ஐயரின் பொறுப்பில் விட்டுவிட்டு,மேற்கு பகுதிக்கு வந்தனர்.நெய்யூரை தலைமையிடமாக கொண்டனர்.தற்போது மருத்துவமனை மற்றும் கட்டிடங்கள் இருக்கும் இடங்கள் அப்போது ஒரு காட்டுப்பகுதியாய் காணப்பட்டது.அவ்விடத்திற்கு நெய்யூர் என பெயரிட்டதே ஐயர்தான்.இப்பகுதிகளை ஐயரின் நெருங்கிய நண்பரும் அவருக்கு தமிழ் கற்று கொடுத்தவரும்,நெய்யூருக்கு மேற்க்குபகுதியான மேக்கோட்டில் வசித்துவந்தவருமான திரு ராமன் தம்பி அவர்கள் கிரயமாக அளித்துள்ளார் இவர் நாயர் சமுதாயத்தை சார்ந்த ஓர் இந்து என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.இவர் ஐயரோடு கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு பல இந்துக்களுக்கு எரிச்சலைக்கொடுத்தது ஆகவே இந்துக்கள் ராமன் தம்பிக்கு பெரும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். ஐயர் அவர்கள் நேயூர் மிஷன் பகுதியின் கட்டிடங்கள் மற்றும் ஊழிய வேலைகள் நடைபெற்று வந்த காலத்தில் மண்டைக்காட்டில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்து மேற்ப்படி வேலைகளையும் ஊழியத்தையும் கவனித்து வந்தார்.பங்களா மண்டைக்காடு சந்திப்பிலிருந்து கடற்க்கரைக்குசெல்லும் சாலையின் மேற்கு பகுதியில் கால்வைக்கு தெற்கிலும் கடலுக்கு வடக்கிலும் குருசடிக்கு மேற்க்கிலுமாகவுள்ள உள்ள பகுதியில் அமைந்து இருந்தது. மீட் ஐயரின் ஊழியத்தால் மக்கள்(கிறிஸ்தவர்கள்)நாகரீகம் பெற்று தோள்சீலை அணிய ஆரம்பித்ததோடு சமுதாயத்தில் யாருக்கு யாரும் தால்தோர் இல்லை என்ற நில்லையை உணர்ந்து மேல் சாதியார் என தங்களை பாவித்து கொண்ட இந்துக்களால் தாங்கள் அடிமைப்பட்டதை எதிர்த்தனர்.ஓய்வு நாட்களில் அரசாங்கவேலை செய்ய கிறிஸ்தவர்கள் மறுத்தனர் இவைகளுக்கெல்லாம் காரணம் மீட் ஐயர் என எண்ணி அவரைப்பகைத்து 1829-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் நாள் மீட் ஐயரை கொலை செய்ய திட்டமிட்டு சமூக விரோதிகள் அவர் தங்கியருந்த மண்டக்காட்டிர்க்கு புறப்பட்டனர் முந்தின நாள் இரவிலேயே இச்செய்தியை அறிந்து கொண்ட ஐயர் உதயகிரிக்கொட்டை பட்டாளத்தின் தலைவராகிய கேப்டன் சிபால்ட் என்பவருக்கு கடிதம் எழுதி அக்கடிதத்தை மண்டைக்காட்டில்லுள்ள வாலிபர் மூலமாய் கொடுத்தனுப்பினார்.கடிதம் கண்ட சிபால்ட் துறை குதிரை பட்டாளத்தோடு மண்டைக்காட்டிற்கு வந்தார்.வரும் வழியில் எதிரிகள் கொலைசெய்யும் ஆயுதங்களுடன் பகவதியம்மன் கோவில் முன் பூஜை செஇதுகொண்டிருண்டதை கண்டு துரத்தியடித்தார் இவ்வித பயங்கர விரோதிகள் மத்தியிலிருந்து விலகி உதயகிரி கோட்டைக்குள் அவரும் அவரது குடும்பமும் வந்து சிலகாலம் தங்கியிருக்க வேண்டும் என சிபால்ட் துரை கேட்டுக்கொண்டார் அனால் மீட் ஐயர் தமது கிறிஸ்தவ சபையாரை விட்டு விலகி இருக்க விரும்பவில்லை பின்னர் ஐயர் நெய்யூரில் தனது குடும்பத்துடன் தங்கி இறைத்தொண்டாற்றினார்.
ஐயர் குடும்பத்தில் அடிக்கடி மரணங்கள் நேர்ந்தன.1830-ஆம் தியோடர் என்ற மகனும்,1836-இல் ஜோசப் என்ற மகனும் 1836-இல் நீல் என்ற மகனும் இறந்தனர்.வர்களது உடல்கள் நெய்யூரிலேயே அடக்கம்பண்ணபட்டன.1848-ஆம் ஆண்டு பெப்பரவரி 6 ஆம் நாள் ஐயரின் இரண்டாம் மனைவியும் காலமானார் அவரது உடலும் நெய்யூரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஐயர் அவர்கள் நெய்யூரிலும் ஓர் ஆச்சு கூடம் அமைத்தார். மக்களை அறியாமை என்னும் இருளில் இருந்து விடுவித்து அறியொழி வீசசெய்தார் கல்வி கூடங்கள் பல அமைத்தார்.திருவிதான்கூரில் நடந்த அடிமை வியாபாரத்தை மாற்றிட தீவிரமாக முயன்றார் வெற்றியும் கண்டார்.ஐயர் மிக சிறந்த இலட்சியங்கள் உடையவர் அஞ்சா நெஞ்ச்டையவர் சுய அடக்கமுடையவர் துணிந்து செயல்படும் தன்மை வாய்ந்தவர்,இறைபக்த்தி மிகுந்தவர்.
   மீட் தனக்கு தனக்கு உளியத்தில் உதவியாக இருக்கவும் தன்னை கவனிக்கவும் 1851-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் திரு தேவவரம் முனுஷியின் மூத்த மகளான லாயிஷ் விடால்ப் பூபல்டை தனது மனைவியாக திருமணம் முறைப்படி செய்தார்.இத்திருமணத்தை மத்திக்கோடு சபையின் முதல் கிறிஸ்தவரான திரு.மாடன் மார்த்தாண்டன் என்பவரது மகன் திரு வேத மாணிக்கம் சுவிசேஷகர் கொத்தனார் விளை ஆலயத்தில் வைத்து பல மிஷன் ஊழியர்கள் முன்னிலையில் முறைப்படி நடத்திவைத்தார்.இவர்களுக்கு 4 பிள்ளைகள் பிறந்தனர்.இந்த அம்மையார் ஐயரின் இறுதிகாலமட்டும் ஆறுதலும் உதவியுமாயிருந்தார்.
  ஐயரின் மூன்றாம் திருமணம் மிஷன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கிற்று.இத்திருமணத்தால் திருச்சபைக்கு பெரும் கேடு விளையும் என குறிப்பிட்டு திருவிதான்கூர் வட்டார குழுவுக்கு புகார் மனுவும் கொடுக்கப்பட்டது. ஆகவே மீட் ஐயர் 1852-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிஷனைவிட்டு விலகி திருவிதான்கூர் அரசு பணியில் சேர்ந்தார்.அவர் மிஷனை விட்டுவிலகி பின்னரும் திருவனந்தபுரத்தில் மெற்றீர் ஐயருடன் சேர்ந்து மிஷன் ஊழியத்திற்கு மிகுந்த ஊக்கமளித்து வந்தார் 1855-இல் திருவனந்தபுரம் சென்று தங்கினார் அவர் தங்கிய இடம் மீட்ஸ் காம்பவுண்ட் என்று இன்னும் அழைக்கப்படுகிறது.திருவனந்தபுரத்திலுள்ள அச்சகத்தின் தலைமை பொறுப்பாளராகவும் தனது பணியை தொடர்ந்தார்.இந்நேரத்தில் மிஷன் சபைகளில் இருந்து சென்ற ஏராளமான மக்களுக்கு வேலைதேடி கொடுத்து உதவினார். இங்கிலாந்து நாட்டில் பிறந்த மறைதிரு சார்ல்ஸ் மீட் ஐயர் அவர்கள் தன் வாழ்வை முட்டிளுமாக இந்தியாவுக்காக அதிலும் குறிப்பாக நம் வாழுகின்ற தென் கோடியான தென் திருவிதான்கூருக்காக அர்பணித்தார்.அவர் ஆற்றிய ஊழியத்தின் பயனாகத்தான் மண்டைகாடு சபை தோன்றி 161-ஆம் ஆண்டுகள் வளர்ச்சிக்குப்பின் இன்றைய பொலிவுடன் காட்சி தருகின்றது மறைந்தும்,வாழும் அவரது  புகழ் மாறது அவர் வழி நின்று நாம் இறைபணி ஆற்ற எல்லாம் வல்ல இறைமைந்தன் அருள் புரியட்டும்.
வணக்கம்
இவண்
 மீட் நினைவு ஆயர் மண்டல திருச்சபை மண்டைக்காடு 
 

No comments:

Post a Comment